/* */

காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 18 மாத குழந்தை உயிரிழப்பு

காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 18 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 18 மாத குழந்தை உயிரிழப்பு
X

காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியான 18 மாத குழந்தை சாத்வீக்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 49 வது வார்டு பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு 18 மாத குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் மரணத்தை தொடர்ந்து அப்பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 49 வது வார்டு பகுதியை சேர்ந்தது அன்னை காமாட்சி அவின்யு. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல் குறுக்குத் தெருவில் மதுராந்தகம் வட்டத்தில் வேளாண் துறை அலுவலராக பணிபுரிந்து வரும் விஜயன்- பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இவர்களின் 18 மாத குழந்தையான சாத்வீக் கடந்த ஞாயிறு அன்று காய்ச்சல் காரணமாக காஞ்சிபுரத்தில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , அதன் பின் மேல்சிகிச்சைக்காக திங்கட்கிழமை சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான்

அங்கு பரிசோதிக்கப்பட்டதில் குழந்தைக்கு டெங்கு அறிகுறி காணப்பட்டது அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள் இரவு குழந்தை சாத்வீக் பரிதாபமாக உயிரிழந்தான்.

குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இத்தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு வீடாக சென்று டெங்கு கொசு தடுப்பு பணியில் ஈடுபட்டும், கொசு மருந்து அடித்தும் வீட்டில் உள்ள நபர்களின் உடல்நிலை குறித்து தகவல்களை சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு நத்தப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு வசித்து வரும் நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அப்பகுதியில் ஆறுக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் தேங்கி இருந்த நீரில் கொசு உற்பத்தியானதா ? அல்லது வீட்டில் உள்ள பொருட்களில் தேங்கிய தண்ணீரால் உருவானதா என்பது குறித்தும் மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே அப்பகுதியில் உள்ள பெண்மணிக்கு டெங்கு அறிகுறி ஏற்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்த விவரத்தை சுகாதாரத் துறை , மாநகராட்சிக்கு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமில் குறிப்பாக குழந்தைகளை பரிசோதிக்க வருமாறு அப்பகுதியினை மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று அழைத்து வருகின்றனர்.

காஞ்சியில் டெங்குவிற்கு 18 மாத குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் வசித்து வந்த சிறுமி காஞ்சிபுரம் வீட்டுக்கு வந்த போது டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு அவரும் சென்னையில் சிகிச்சை பலன் இன்றி இறந்ததும் குறிப்பிடத்தக்கது.

Updated On: 17 Dec 2022 10:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  2. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  3. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  4. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  5. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  6. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  7. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  8. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...
  9. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  10. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!