/* */

காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் பொதுமக்கள் நலனுக்காக தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பழங்கள் பழரசங்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால  தண்ணீர் பந்தல் திறப்பு
X

காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

கோடை காலத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி மற்றும் சோமசுந்தரம் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் பழங்கள் வழங்கினர். வழக்கம்போல் பொதுமக்கள் பெற்று செல்லாமல் போட்டி போட்டுக் கொண்டு பழங்களை அள்ளி சென்றனர்.


தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாகவே கோடை வெப்பம் மற்றும் அனல் காற்று பொதுமக்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு வீசுகிறது. மேலும் பொதுமக்கள் கோடை வெப்பத்தை தவிர்க்க வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் நீர் மற்றும் குளிர்பானங்களை அருந்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோடை காலம் வந்தாலே அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுக நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் திறப்பது வழக்கம்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பழ வகைகள் மற்றும் மோர் , இளநீர், கூழ் வெள்ளரி ஜூஸ் உள்ளிட்ட பழரசம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கோடை கால வெப்பத்தை தணிக்கும் வகையும் இந்தப் பொருட்களை வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.

மேலும் ஒரு பக்கம் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் பழங்கள் வழங்கிக் கொண்டிருந்த நிலையில் மற்றொரு பக்கத்தில் இருந்த பழங்களை பொதுமக்கள் வழக்கம்போல அள்ளி கோணியில் கட்டி சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 April 2024 10:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...