/* */

காஞ்சிபுரத்தில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
X

மின்சார கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு கண்டித்து காஞ்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காவலான்கேட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. சார்பில் பல்வேறு வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதில் குறிப்பாக மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்யபடும், மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஓராண்டில் வீட்டு வரி உயர்வு , பால் விலை உயர்வு , தற்போது மின்கட்டண உயர்வு என பல்வேறு வகைகளில் பொதுமக்களை இன்னலுக்கு ஆளாக்கி வருகின்றனர்.

இதனை கண்டித்து தமிழக முழுவதும் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் என தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் காவலான்கேட் பகுதியில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி சோமசுந்தரம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் தமிழக அரசுக்கான கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா. கணேசன், மைதிலி திருநாவுக்கரசு , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சோமசுந்தரம் , மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் , பகுதி கழக செயலாளர் கோல்ட்ரவி , பாலாஜி , ஸ்டாலின் , ஜெயராஜ் , ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் , அத்திவாக்கம் ரமேஷ் , களக்காட்டூர் ராஜீ மற்றும் நகர் , பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.


Updated On: 16 Sep 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  8. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  9. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  10. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...