/* */

கையக நிலங்களில் சாகுபடி செய்யக்கூடாது என காஞ்சிபுரம் ஆட்சியர் உத்தரவு

விரைவுப் பாதைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சாகுபடி செய்யக்கூடாது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

கையக நிலங்களில் சாகுபடி  செய்யக்கூடாது என காஞ்சிபுரம்   ஆட்சியர் உத்தரவு
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி.

பெங்களூரு - சென்னை விரைவுப் பாதைக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோவிந்தவாடி முதல் இருங்காட்டுக் கோட்டை வரை நில எடுப்பு செய்யப்பட்டு 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.

பெங்களூரு - சென்னை விரைவுப் பாதை பணிக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் நில எடுப்பு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டு நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிலம் கொடுத்த 80 சதவீதிதம் பேருக்கு மேல் இழப்பீட்டுத் தொக வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ளவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோவிந்தவாடி முதல் இருங்காட்டுக் கோட்டை வரை காஞ்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட கோவிந்தவாடி, புத்தேரி, மணியாட்சி, வேளியூர், சிறுவாக்கம், தண்டலம், பரந்தூர், சிறுவள்ளூர், பொடவூர், மடப்புரம், தொடூர், ஆரியம்பாக்கம் மற்றும் திருப்பெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட கூத்தவாக்கம், சிவன்கூடல், இராமானுஜபுரம், கீரநல்லூர், பொடவூர், நந்திமேடு, சோகண்டி, மொளச்சூர், திருமங்கலம், வடமங்கலம், சிறுகிளாய், திருப்பெரும்புதூர், பாடிச்சேரி, கிளாய், ஆயகொளத்தூர், நெமிலி, இருங்காட்டுக் கோட்டை, திருப்பந்தியூர் ஆகிய 30 கிராமங்களில் நில எடுப்பு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட கிராமங்களில் நில எடுப்பு செய்யப்பட்ட இடங்கள் அளவீடு செய்து உட்பிரிவு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் இனி எவரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது மற்றும் நில எடுப்பு மேற்கொண்ட புலங்களில் சாகுபடி செய்யக்கூடாது என்பதை வருவாய் துறையினர் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 6 Jan 2022 1:49 PM GMT

Related News