/* */

பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் 90.28 % தேர்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8341 மாணவர்களும் 7943 மாணவிகளின் என மொத்தம் 16 ஆயிரத்து 284 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர்.

HIGHLIGHTS

பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் 90.28 % தேர்ச்சி
X

பைல் படம்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் பள்ளி கல்வித்துறை சார்பாக 10, 11 ,12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியது.

இந்நிலையில் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியாகும் எனவும் அதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டது

முடிவுகள் வெளியான நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 89 அரசு பள்ளிகள் , 4 மாநகராட்சி பள்ளிகள், ஏழு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், இரண்டு சமூக நலத்துறை பள்ளிகள், 23 அரசு உதவி பெறும் பள்ளிகள் , 59 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என மொத்தம் 184 பள்ளிகள் என காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுகிறது

நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு 8,341 மாணவர்களும் 7 1943 மாணவர்களும் என மொத்தம் 16 ஆயிரத்து 284 மாணவ மாணவிகள் அரசு தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

தேர்வு எழுதியதில் 7,167 மாணவர்களும் 7535 மாணவர்களும் என மொத்தம் 14 ஆயிரத்து 72 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்கள் 85.92 சதவீதமும், மாணவிகள் 94.86 சதவீதம் என மொத்தம் 90.28 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 184 பள்ளிகள் உள்ள நிலையில் 42 பள்ளிகள் 100% வெற்றி பெற்றுள்ளது. இதில் எட்டு அரசு பள்ளிகள் உள்ளது. கடந்தாண்டு 28 ஆம் இடத்தில் இருந்த காஞ்சிபுரம் கல்வி மாவட்டம் தற்போது இருபத்தைந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

அரசு பள்ளியில் பயின்ற 4244 மாணவர்களில் 3430 மாணவர்களும் 4886 மாணவிகள் தேர்வு எழுதியதில் 4528 மாணவிகள் என தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாணவர்களை காட்டிலும் மாணவிகள் 11.85 சதவீதம் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் இந்த ஆண்டு 24 ஆவது இடத்தில் உள்ளது.

Updated On: 19 May 2023 9:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்