/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து கோயில்களிலும் 3 நாட்கள் தரிசனத்துக்கு தடை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து கோயில்களிலும் 3 நாட்கள் தரிசனத்துக்கு தடை என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  அனைத்து கோயில்களிலும் 3 நாட்கள் தரிசனத்துக்கு தடை
X

மாவட்ட கலெக்டர் ஆர்த்தி

தமிழ்நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக ஆடி மாத திருவிழாக்கள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு வருகிறது.

அன்றாடம் நடைபெறும் ஐதீக முறைப்படியான பூஜை புனஸ்காரங்கள் மட்டும் நடத்திக் கொள்ளவும் பொதுமக்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,

இந்த நிலையில் தற்போது ஆடிப் பெருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்கள் உட்பட அனைத்து கோயில்களுக்கும் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,

இதன் காரணமாக கொரோனா நோய்த் தொற்று பரவல் மீண்டும் அதிரகரிக்கக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.எனவே பொது மக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குமரகோட்டம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,

வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உட்பட அனைத்து முருகன் திருக்கோயில்களிலும்,

மேலும் பக்தகர்கள் அதிகமாக கூடும் என எதிர்பார்க்கப்படும் கீழ்கண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்த முருகன் கோவில்களிலும், காஞ்சிபுரம், அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், அருள்மிகு ஏகாம்பரநார் திருக்கோயில், அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில் மற்றும் அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் போன்ற மக்கள் அகிகம் கூடும் திருக்கோயில்கள் உட்பட மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களிலும் ஆடி கிருத்திகை முன்னிட்டு 01.08.2021 (ஞாயிற்றுக்கிழமை) முதல் 03.08.2021 (செவ்வாய்கிழமை) வரை சுவாமி தரிசனம் செய்வதற்று அனுமதி கிடையாது.

மேலும் ஆகம விதிகளின்படி சுவாமி அலங்காரங்கள் பூஜை புனஸ்காரங்கள் அர்ச்சகர்கள் மூலம் தொடர்ந்து நடைபெறும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Updated On: 31 July 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’