/* */

2 வது வருடமாக 100 சதவீத தேர்ச்சி பெற்ற பரந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி

2 வது வருடமாக 100 சதவீத தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளது பரந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி.

HIGHLIGHTS

2 வது வருடமாக 100 சதவீத தேர்ச்சி பெற்ற பரந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி
X

+2 தேர்வு முடிவுகள் கைபேசியில் பார்க்கும் மாணவிகள்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேல்நிலைப் பள்ளிகளுக்கான அரசு பொது தேர்வு கடந்த மார்ச் ஒன்றாம் தேதி துவங்கி மார்ச் 22ஆம் தேதி வரை தமிழக முழுவதும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்களின் மதிப்பெண்கள் அவர்களது இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது.

இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும் மாணவர்களின் அலைபேசியின் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டு அதன் பேரில் இன்று காலை 10 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 12,413 பேரில் 11, 455 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 92.28 சதவீதம் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் 33வது இடத்தினை தேர்ச்சி பட்டியலில் பெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 102 மேல்நிலைப் பள்ளிகளில் , அரசு பள்ளிகள் 46 இல் ஒரு பள்ளி மட்டுமே 100 சதவீத தேர்ச்சியும் , தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 41 இருந்த நிலையில் 23 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

அவ்வகையில் பரந்தூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் 37 மாணவர்களும் 54 மாணவிகள் என மொத்தம் 91 பேர் தேர்வு எழுதிய நிலையில் 37 மாணவர்களும், 54 மாணவிகளும் என மொத்தம் 91 பேரும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கடந்தாண்டிலும் தேர்ச்சி பெற்ற இந்த பள்ளி தொடர்ச்சியாக இந்த முறையும் 100 சதவீதத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 41 மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 23 பள்ளிகள் மட்டுமே 100 சதவீதத்தை எட்டியுள்ளது. இது மொத்த சதவீதத்தில் 50 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

பல பள்ளிகளில் ஓரிரு மாணவர்கள் தேர்ச்சி பெறாதது அப்பள்ளியின் 100 சதவீதத்தை கனவினை தகர்த்து உள்ளது. இது தனியார் பள்ளி மீது மோகம் கொண்டுள்ள பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் , ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் , சுயநிதி மேல்நிலைப் பள்ளிகள் என அனைத்தும் 100 சதவீத தேர்ச்சியை எட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Updated On: 6 May 2024 4:01 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...