/* */

உத்தரமேரூர் : 13 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 13 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

உத்தரமேரூர் : 13 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
X

கட்டவாக்கம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் ஆகியோர் திறந்து வைத்த போது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சொர்ணாவாரி பருவத்தில் பல ஆயிரம் கணக்கில் பயிரிடப்பட்டு கடந்த மாதம் முதல் நெல் அறுவடை துவங்கியுள்ளது.

நெல் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்க விவசாயிகள் ஆர்வம் கொண்டு விரைவில் திறக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வட்டத்தில் மாவட்டம் முழுவதும் 31 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி அறிவித்திருந்தார்.

அவ்வகையில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 13 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி செல்வம் ஆகியோர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்து வருகின்றனர்

நேற்று உத்திரமேரூர் பகுதியில் மருதம், திருப்புலிவனம், வேடபாளையம், இளநகர் உள்ளிட்ட எட்டு இடங்களிலும், இன்று வாலாஜாபாத் பகுதியில் நத்தாநல்லூர், கட்டவாக்கம், தென்னேரி, திருவாங்கரணை, மதுரா நல்லூர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக நில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், திமுக நிர்வாகி பாண்டியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், வேளாண்மை துறை அதிகாரிகள் பொதுமக்கள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்

Updated On: 20 Sep 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்