/* */

தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி

தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி
X

காஞ்சிபுரத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ரங்கோலி விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

உலகமெங்கும் மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பெண்கள் 100 சதவீதம் வாக்களிப்போம் எனவும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் , அரசு பெண் அலுவலர்கள் என பலர் இணைந்து வண்ண வண்ண கோலங்கள் வரைந்து 100சதவீதம் வாக்களிப்போம் , வாக்கு விற்பனைக்கு அல்ல மற்றும் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதினர்.

இக்கோலங்களை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி , மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா உள்ளிட்டோர் பார்வையிட்டு மகளிர் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பேரணியாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 8 March 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்