/* */

பெண்கள் பயணிக்க கூடுதல் ரயில் பெட்டி - எம்எல்ஏ கோரிக்கை

பெண்கள் பயணிக்க கூடுதல் ரயில் பெட்டி - எம்எல்ஏ கோரிக்கை
X

பெண்கள் பயணம் செய்ய கூடுதல் ரயில் பெட்டியை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தென்னக ரயில்வே பொது மேலாளரிடம், காஞ்சிபுரம் எம்எல்ஏ., வலியுறுத்தினார்.

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் இன்று ஆய்வு செய்தார். அப்போது ரயில் நிலைய தண்டவாளத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் இரயில்வே கேட் பராமரிப்பு குறித்தும் அடிப்படை வசதிகள் உள்ளதா, ரயில் நிலையம் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். கழிவறை , ஊழியர்களின் ஓய்வறைகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது உடனிருந்த காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ., எழிலரசன் , தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமசிடம் காஞ்சிபுரம் புதிய இரயில் நிலையத்தில் கட்டி முடிக்கப்படாமலிருக்கும் சாலை மேம்பாலத்தை விரைந்து முடிக்கவும், காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணத்திற்கு புதிய இரயில் சேவையை துவக்கவும்,மகளிர் பயணம் செய்ய கூடுதல் பெட்டியை ஒதுக்கீடு செய்யவும்,பழைய காஞ்சிபுரம் இரயில் நிலையத்தை தொன்மை வாய்ந்த இரயில் நிலையமாக அறிவிக்கக் கோரியும், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இரு ரயில் நிலையங்களிலும் பயணிகள் வசதிகளை மேம்படுத்தவும் காஞ்சிபுரம் வெள்ளைகேட் அருகே புதிய இரயில்வே நிலையம் அமைக்கவும்,வையாவூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரயில்வே கேட்டை அகலப்படுத்துவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்தார்.

Updated On: 27 Jan 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’