/* */

செஸ் ஒலிம்பியாட் : பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மாரத்தான் ஓவிய போட்டி ..

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக ஏற்படுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

செஸ் ஒலிம்பியாட் : பள்ளி மாணவர்கள்  கலந்து கொண்ட மாரத்தான் ஓவிய போட்டி ..
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வரும் ஓவிய மாரத்தான் போட்டியில் மாணவிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் திருவிழா வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.இதில் 186 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.இதனையொட்டி கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரத்தில் பள்ளிக் கல்வித் துறையுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக விழிப்புணர்வு ஓவியம் மாரத்தான் போட்டி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அண்ணா காவலர் அரங்கத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் நகராட்சியில் உள்ள 15 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து கொண்டு தங்கள் ஓவிய திறமைகளை வரைந்து வருகின்றனர்.

இரண்டு வகைகளாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் ஐந்து மாணவர்கள் குழு ஒருங்கிணைப்புடன் விழிப்புணர்வு ஓவியம் வரைய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

ஓவிய ஆசிரியர்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் இதனை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

இப்போட்டியினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் ஸ்ரீதேவி , காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Updated On: 18 July 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  2. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  3. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  4. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  5. வீடியோ
    🔴LIVE : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு |"தனி...
  6. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  7. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  8. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  9. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்