/* */

உளுந்தூர்பேட்டையில் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை: உடலை வாங்க மறுத்து மறியல்

உளுந்தூர்பேட்டையில் தற்கொலை செய்துகொண்ட நிதி நிறுவன ஊழியர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

உளுந்தூர்பேட்டையில் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை: உடலை வாங்க மறுத்து மறியல்
X

உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போலீசார் .

கள்ளகுறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி மகன் கனகராஜ் ௩௦. இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். 4 நாட்களுக்கு முன் 1.50 லட்சம் ரூபாய் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த கனகராஜ் நேற்று முன்தினம் இரவு எட்டு மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். இதனையடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் கனகராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது . கனகராஜ் இறப்புக்கு நிதி நிறுவன மேலாளர் வெங்கடேசன் தான் காரணம் என கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனகராஜ் உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து 5:30 மணியளவில் மறியலை கைவிட்டனர் . அதனை தொடர்ந்து உறவினர்கள் உடலை பெற்றுச் சென்றனர்.

Updated On: 3 Oct 2021 5:09 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  5. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  7. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !