/* */

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கான சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கான சிறப்பு முகாம்
X

கலெக்டர் ஸ்ரீதர் 

கள்ளக்குறிச்சியில், 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிளுக்கு, மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முகாமை, ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். முகாமில், கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், காது கேளாதவர்கள் மற்றும் வாய் பேச இயலாதவர்கள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் எலும்பு குறைபாடுடையவர்கள் என மொத்தம் 83 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்.

இவர்களுக்கு, மருத்துவக்குழுவினர் மூலம் ஊனத்தின் தன்மை மற்றும் வயது சான்று குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இக்குழுவின் பரிந்துரையின் பேரில், மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. முகாமில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ராஜாமணி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 24 Dec 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை