/* */

முதற்கட்ட வாக்குப்பதிவு: அலுவலர்களுக்கு கணினி மூலம் ஒதுக்கீட்டு பணி

முதல் கட்ட வாக்குப்பதிவு வாக்குச்சாவடிகளில் பணியாற்ற அலுவலர்களுக்கான கணினி மூலம் ஒதுக்கீட்டு பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

முதற்கட்ட வாக்குப்பதிவு: அலுவலர்களுக்கு கணினி மூலம் ஒதுக்கீட்டு பணி
X

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வாக்குப்பதிவு அலுவலர் ஒதுக்கீட்டுக்கான கூட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட சுழற்சி முறையில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் விவேகானந்தன் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான பி.என்.ஸ்ரீதர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான பி.என்.ஸ்ரீதர் தெவித்ததாவது:

மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக 06.10.2021 பற்றும் 09.10.2021 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அலுவலர்கள் விபரம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இணையயதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் வாக்குப்பதிவு அலுவலர்களின் விவரங்களை ஒதுக்கீடு செய்யும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சுழற்சி மூறை (First and Second Randomization) பணிகள் கணினி மூலம் இணையத்தின் வாயிலாக ஏற்களவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள திருக்கோவிலூர், திருநாவலூர் மற்றும் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குப்பதிவு அலுவலர்கள் குழு தேர்வு செய்தலுக்காக மூன்றாம் கட்ட சுழற்சி முறை பணிகள் கணினி மூலம் இணையதளத்தின் வாயிலாக இன்று மேற்கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வின்போது, திட்ட இயக்குநர் மரு.இரா.மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (தேர்தல், வளர்ச்சி), வட்டார வளர்ச்சி அலுவலர் தேர்தல்), தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தார்.

Updated On: 4 Oct 2021 4:10 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு