/* */

கள்ளக்குறிச்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு செயல்விளக்க ஒத்திகை

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை குறித்து செயல்விளக்க ஒத்திகை ஆட்சியர் ஸ்ரீதர் முன்னிலையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு செயல்விளக்க ஒத்திகை
X

மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் முன்னிலையில் நடைபெற்ற செயல்விளக்க ஒத்திகை.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பாக வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் எதிர்கொள்ள தேவையான முன்னோற்பாடு பணிகள் தொடர்பான செயல்விளக்க ஒத்திகை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதனால் நீர் நிலங்கள் மற்றும் அணைகள் வேகமாக நிரம்பி வருவதனால் பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இப்பருவமழை காலங்களில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் மீட்கும் பொருட்டு பேரிடர் மேலாண்மை துறையுடன் இணைந்து தமிழ்நாடு தியணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

இம்மீட்பு பணிகளின் போது பயன்படுத்தப்படவுள்ள பவர் ஷா, கலைப் ஜாக்கெட், மூச்சுக் கருளி, அலுமினரிய சூட்டு, மைவாட்ராவிக் டோர் ஒப்பனர், போஸ்ட் கட்டர், ஊஹாங்கி கள்ளா பம்ப் ஆகிய சிறப்பு தளவாடங்களை கொண்டு செயல்விளக்க ஒத்திகை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் செய்து காண்பிக்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகளில் மீட்பு பணியில் ஈடுபடவுள்ள தீயணைப்பு துறையைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாார்கள் எப்போதும் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். மாவட்டத்தில் எங்கு பேரிடர் ஏற்பட்டாலும் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

இச்செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.விஜய்பாபு, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை அலுவலர் சரவணன், கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் நாகேஷ்வரர், தியாகதுருகம் தியணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் மற்றும் கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை தீயணைப்பு ஊர்தி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 8 Nov 2021 12:43 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  3. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  4. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  5. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  6. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  7. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  8. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  9. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  10. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!