/* */

கொடைக்கானலில் மக்களின் முகம் காணாமல் ரோஜாக்கள் 'வாட்டம்' !

கொடைக்கானல் ரோஜா தோட்டத்தில் பூக்கள் இருந்தும் அவற்றை ரசிக்க யாரும் வராத நிலையில், பூக்கள் அழுகி வருகின்றன.

HIGHLIGHTS

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அப்சர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான ரோஜாத்தோட்டம் அமைந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், கொடைக்கானலில் சுற்றுலா தொழில்கள் மட்டுமின்றி பயணிகளின் வருகை இன்றி சுற்றுலா தலங்களும் வெறிசோடியே காணப்படுகின்றன.

இந்த நிலையில், ரோஜா தோட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பூக்கள் அதிக அளவில் போது குலுங்குகின்றன. பல்வேறு வண்ணங்களில் கண்ணை கவரும் வகையிலும், காண்போரை வியக்க வைக்கும் விதத்தில் பல ஏக்கர் பரப்பளவில், இந்த ரோஜாத் தோட்டம் அமைந்துள்ளது.

எனினும், கொரோனா கட்டுப்பாடுகளால் மக்களின் வருகையின்றி, இந்த ரோஜா மலர்களை ரசிக்க யாருமில்லாத பரிதாப நிலை உள்ளது. மக்களின் மலர்ந்த முகங்களை பார்க்க முடியாமல் போனதாலோ என்னவோ, ரோஜாக்களும் வாட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது பெய்யும் மழையால், ரோஜா பூக்கள் அழுகியும், கடும் வெயிலால் கருகி வருகிறது.

Updated On: 28 April 2021 2:37 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு