/* */

திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளுக்கு வாக்காளர் பட்டியல் வெளியீடு

திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளுக்கு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

HIGHLIGHTS

திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளுக்கு வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

திண்டுக்கல் மாநகராட்சியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளில் வாக்காளர் பட்டியல் இன்று மாநகராட்சியில் ஆணையாளர் சிவசுப்பிரமணியன், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

அதன்படி, மாநகராட்சி 48 வார்டுகளில் மொத்தம் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 670 பேர் வாக்களர்களாக உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 82 ஆயிரத்து 115 பேரும், பெண்கள் 93 ஆயிரத்து 522 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 33 பேரும் வாக்காளர்களாக உள்ளனர்.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியம் செய்தியாளரிடம் பேசும்போது, மாநகராட்சியில் உள்ள 48. வார்டுகளில் 136 பாகங்கள் உள்ளன. 183 வாக்கு மையங்கள் உள்ளன. ஆர்டிஓ மூலம் வாக்காளர் பெயர் நீக்கம், பெயர் சேர்ட்தல் பணிகள் நடந்து வருவதால், அது முடிந்த பின்னர், கூடுதலாக ஒரு வாக்காளர் பட்டியல் இணைப்பு பட்டியலாக சேர்த்து, பின்னர் வெளியிடப்படும். இதுவரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் நீக்கம் தொடர்பாக, 5 ஆயிரத்து 186 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.

Updated On: 9 Dec 2021 9:42 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு