/* */

கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் புறக்கணிப்பதாக மாற்றுத்திறனாளிகள் புகார்

அலைச்சலைத் தவிர்க்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து யூனியன்களிலும் முகாம்களை நடத்த வலியுறுத்தியுள்ளனர்

HIGHLIGHTS

கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம்  புறக்கணிப்பதாக  மாற்றுத்திறனாளிகள் புகார்
X

அலைச்சலைத் தவிர்க்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்

மாற்று திறனாளிகளை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் புறக்கணிப்பதாக மாற்றுத் திறனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வாரம்தோறும் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவது வழக்கம்.

இதற்கிடையே, கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக இந்த முகாம் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு, அடையாள அட்டை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, சுமார் 600க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் குவிந்தனர். ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீல்சேர் வசதி இல்லை. எங்களை பரிசோதித்து சான்றிதழ் வழங்க போதிய மருத்துவர்கள் இல்லை. குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. கொரானா பரவலை தடுக்கும் வகையில், சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை மாற்று திறனாளிகள் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 யூனியன்களில் ஆங்காங்கே இந்த முகாம்களை நடத்தினால், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு, நாங்கள் வந்து சிரமப்படத் தேவையில்லை. இது குறித்து, பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வலியுறுத்தியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மொத்ததில் மாற்றுத்திறனாளிகளை மாவட்ட நிர்வாகம் புறக்கணித்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.

Updated On: 3 Sep 2021 7:27 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு