/* */

திண்டுக்கல்லில் மண்ணைத் தூற்றி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

விநாயகர் சதுர்த்தி நடத்த அனுமதிக்காத திமுக அரசு நாசமா போகட்டும் என கூறி மண்ணைத் தூற்றி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் மண்ணைத் தூற்றி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
X

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு வழிமுறைகளை விதித்து வருகிறது. வழக்கமாக விநாயகர் சதுர்த்தி அன்று தமிழகம் முழுவதும் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு, பின்னர் ஊர்வலமாக சென்று கரைப்பது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி சிலை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும் தடை விதித்துள்ளது. இதனை கண்டித்து தமிழகமெங்கும் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் முன்பு, இந்து முன்னணி சார்பாக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது மதுக்கடைகளை திறக்கலாம், அரசு விழாக்கள் நடத்தலாம், ஆனால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி இல்லையா என கோஷங்கள் எழுப்பினர். மேலும் விநாயகர் சதுர்த்தி சிலை வைப்பதற்கு ஊர்வலம் நடத்துவதற்கு தடை விதித்த தமிழக அரசினை கண்டித்து, அரசுக்கு நல்ல புத்தி கிடைக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் நாசமாய் போகட்டும் என மண்ணைத் தூவி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Updated On: 2 Sep 2021 5:51 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்