/* */

திண்டுக்கல்: நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

திண்டுக்கல்லில், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

திண்டுக்கல்: நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
X

திண்டுக்கல்லில்,  நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், கவுரவிக்கப்பட்டனர்.

திண்டுக்கல்லில், பட்டதாரி- முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில், ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதில் மாநில தலைவர் மகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஜான் உபால்ட், மாவட்ட தலைவர் ராஜாக் கிளி உள்ளிட்ட நிர்வாகிகளும், ஆசிரியர்களும் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மாநிலத் தலைவர் மகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றோம். 2004 பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து வரைவு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஓராண்டு போராட்ட கால இழப்பீட்டை சரிசெய்து தர முதல்வர், சட்டமன்றத்தில் 110-ன் கீழ் ஆணை பிறப்பிக்க வேண்டும். மேலும் 2004 -2006 ஆம் ஆண்டுகளில் பல்வேறு காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட தொகுப்பூதிய ஆசிரியர், பணியளர்கள் சுமார் 50 ஆயிரம் நபர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கண்டிப்பாக பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.

உயர்கல்வி ஊக்கத் தொகை கடந்த ஆட்சியின் செயல்படுத்தியது போல இந்த ஆண்டும் செயல்படுத்த வேண்டும். பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு வழங்கும் அகவிலைப்படி முறையை மாநிலத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்றவர்களுக்கு பின்னேற்பு ஆணை வழங்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

Updated On: 19 Sep 2021 12:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  6. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...
  9. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்