/* */

தஞ்சை திருப்பழனம் கோயிலுக்கு 40 கிலோ எடை 'மெகா சைஸ்' தொட்டி பூட்டு

தஞ்சாவூர், திருப்பழனம் திருக்கோயிலுக்கு திண்டுக்கல்லிலிருந்து 40 கிலோ எடையுள்ள மெகா சைஸ் பூட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தஞ்சை திருப்பழனம் கோயிலுக்கு 40 கிலோ எடை மெகா சைஸ் தொட்டி பூட்டு
X

திண்டுக்கல்லில் தயாரிக்கப்பட்ட 40 கிலோ மெகா சைஸ் தொட்டி பூட்டு.

பூட்டு என்றாலே பொதுமக்கள் முதல் வியாபாரிகள் வரை அனைத்து தரப்பினருக்கும் முதலில் நினைவுக்கு வருவது திண்டுக்கல் தான். திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடும் அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் மாங்காய், மணி, தொட்டி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் பூட்டு தயாரிக்கப்படுகிறது.

இந்த பூட்டுகள் திருடர்களால் எளிதில் திறக்க முடியாமல் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்குவதால் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் திண்டுக்கல் பூட்டுக்கு தனி மவுசு உள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள கோயில்கள் பெரும்பாலானவற்றில் திண்டுக்கல்லில் தயாரிக்கப்பட்ட பூட்டுக்களை பயன்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் உள்ள தொழிலாளி முருகன் என்பவருடை AMS LOCK நிறுவனம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள திருப்பழனம் ஸ்ரீஆபத்ஸகாயேஸ்வர் சுவாமி திருக்கோயிலுக்கு திண்டுக்கல்லில் இருந்து 40 கிலோ எடையுள்ள மெகா சைஸ் தொட்டி பூட்டு தயாரித்துள்ளார்.

இந்த பூட்டு சிறப்பு அம்சம் 10 லீவர் கொண்ட இந்த பூட்டின் சாவியை தவிர எந்த சாவியை போட்டாலும் திறக்க முடியாது. இந்த பூட்டின் எடை 40 கிலோ சாவி 2 கிலோ இந்த பூட்டை தயார் செய்வதற்கு 15 நாட்கள் ஆகின்றன. இந்த பூட்டு கையால் மட்டுமே தயார் செய்யபட்டு உள்ளது. எந்த ஒரு மெஷினும் பயன்படுத்தபடுத்தபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பூட்டு ரூ 20 ஆயிரத்திற்கு தயாரிக்கபட்டது. கோவிலுக்கு என்றால் திண்டுக்கல்லில் குறைவான விலையில் பூட்டு தயார் செய்து தருகின்றனர். வெளிமார்க்கெட்டில் இந்த பூட்டின் விலை ரூ 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை விற்பனை செய்யபடுகிறது.

Updated On: 3 Aug 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  3. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  6. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  7. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  10. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்