/* */

கொடைக்கானல் பகுதியில் காட்டு யானைகளால் பயிர்கள் சேதம்! விவசாயிகள் வேதனை

வனத்துறையினர் காட்டு யானைகளை தற்காலிகமாக விரட்டுவதும், மறுநாளே மீண்டும் விவசாயப் பகுதிகளுக்குள் வருவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது,

HIGHLIGHTS

கொடைக்கானல் பகுதியில் காட்டு யானைகளால் பயிர்கள் சேதம்!  விவசாயிகள் வேதனை
X

கொடைக்கானலில் பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைக்கிராமங்களான பேத்துபாறை, அஞ்சுவீடு, பாரதி அண்ணா நகர்,மங்களம்கொம்பு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் குட்டியுடன் தொடர்ந்து முகாமிட்டு விவசாய நிலங்களையும், விளை பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றது, மேலும் வனத்துறையினர் காட்டு யானைகளை தற்காலிகமாக விரட்டுவதும், மறுநாளே மீண்டும் விவசாயப் பகுதிகளுக்குள் வருவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது,

இந்நிலையில் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பள்ளங்கி கோம்பை பகுதியில் 4-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் குட்டியுடன் இப்பகுதியில் உள்ள மயிலம்மா என்ற மூதாட்டியின் விவசாய தோட்டப்பகுதியில் முகாமிட்டு அங்கு 1 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த பீன்ஸ் பயிர்களையும்,பலா மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது, இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் அச்சத்தின் உச்சத்தில் உறைந்துள்ளனர்,

இந்நிலையில் கொடைக்கானல் பள்ளங்கி, கோம்பை விவசாயத் தோட்டங்களுக்குள் முகாமிட்டு சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சம், நிரந்தரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினரிடம் மயிலம்மா என்ற மூதாட்டி கையெடுத்து கும்பிட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

சேதமடைந்த பீன்ஸ் பயிர்களுக்கு உரிய இழப்பீடு துரிதமாக வழங்கவும், வனத்துறையினர் விரைவில் யானைக் கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். , மேலும் முதியவர்கள் வசிக்கும் இப்பகுதியில் பெரும் அசாம்பவிதம் நடைபெறுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 21 April 2024 4:04 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...