/* */

திண்டுக்கல் அருகே அ.வெள்ளோடு கல்லறையில் சிலுவைகள் சேதம் போலீசார் விசாரணை

திண்டுக்கல் அருகே பரபரப்பு அ.வெள்ளோடு கல்லறையில் சிலுவைகள் சேதம் போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

திண்டுக்கல் அருகே அ.வெள்ளோடு கல்லறையில் சிலுவைகள் சேதம் போலீசார் விசாரணை
X

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அ. வெள்ளோடு. கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. நேற்று இரவு இந்த பகுதியில் இறந்தவர்களை புதைக்கும் கல்லறையில் இருந்த 25 க்கும் மேற்பட்ட சிலுவை மரங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தி சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ஊர் மக்கள் கல்லறையில் கூடினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த அம்பாத்துறை போலீசார் அப்பகுதி மக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து வருவாய் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில் கல்லறை சுற்று சுவர் கட்டித்தர வேண்டும். சிலுவை மரங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து அம்பாத்துரை போலீசார் சிலுவை மரங்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லறையில் சிலுவை மரங்களை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 13 July 2021 12:19 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  2. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  3. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  4. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  5. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  8. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  10. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...