/* */

கடலூரில் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கல்

மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

HIGHLIGHTS

கடலூரில் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கல்
X

குறிஞ்சிப்பாடி மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் அம்பலவாணன்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் அவர்கள் தலைமையில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அம்பலவாணன்பேட்டை மற்றும் குறிஞ்சிப்பாடி மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் 835 பயனாளிகளுக்கு 9இலட்சத்து 51 ஆயிரத்து 602 மதிப்பீட்டில் துணிமணிகள், 275 குடும்பங்களுக்கு ரூ.3 லட்சத்து55 ஆயிரத்து 104 ரூபாய் மதிப்பீட்டில் பாத்திரங்கள், 131 குடும்பங்களுக்கு எரியாயு இணைப்பு ரூ.1,22,616/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ.1,50,000/-மதிப்பீட்டில் வங்கிகடனுக்கான காசோலையும் ஆக மொத்தம் 1243 பயனாளிகளுக்கு ரூ.15,79,322/-மதிப்பீட்டில் நலத்திட்டங்களை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினர்.

தொடர்ந்து காட்டுமன்னார்கோயில் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு 372 பயனாளிகளுக்கு ரூ.485760/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்க நலத்திட்டங்களை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் 110 விதியின் கிழ் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என அறிவித்து, 08.11.2021 அன்று வேலூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கிவைத்தார்.

அதன் அடிப்படையில் இன்று கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, அம்பலவாணன்பேட்டை,காட்டுமன்னார்கோயில், விருத்தாசலம் ஆகிய 4 மறுவாழ்வு முகாம்களில் 1303 இலங்கை தமிழர்கள் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நல்வாழ்விற்கு தேவையான அடிப்படை கட்டமைப்புளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும், முகாம்வாழ் பிள்ளைகளின் கல்வி மேம்பட கல்வி உதவித்தொகை வழங்கப்படும், ஒவ்வொரு மாதமும் மேற்கண்ட முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு பணக்கொடை, விலையில்லா அரிசி மற்றும் மானிய அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. வருடந்தோறும் முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது கோ ஆப்டெக்ஸ் மூலம் விலையில்லா கைத்தறி துணிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு வீடுகள் கட்டித்தர இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு தகுதியினை மேம்படுத்திட திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். முகாம்களில் உடனடி அவசியத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தரப்படும் என தெரிவித்தார்.

Updated On: 26 Nov 2021 2:37 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  2. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  4. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  5. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  6. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  7. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  9. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  10. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்