/* */

திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பிரச்சாரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கடலூர் நகராட்சியில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார்

HIGHLIGHTS

திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பிரச்சாரம்
X

கடலூர் தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் 

45 வார்டுகளை கொண்ட கடலூர் நகராட்சி திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாநகராட்சிக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் 45 வார்டுகளிலும் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

இதற்கான தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்தில் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த எம் சி சம்பத் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு எந்த பணிகளை மேற்கொண்டார் என கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சியில் கடலூர் சீரழிக்கப்பட்டு உள்ளதாகவும், அடிப்படை கட்டமைப்பு மற்றும் சுகாதாரத்தில் இரண்டே ஆண்டுகளில் சீர்தூக்கி நிறுத்துவேன் என உறுதி அளித்தார்.

எட்டு மாத ஆட்சி காலத்தில் எண்ணற்ற பணிகளை மேற்கொண்டுள்ளது போல, நகராட்சியாக இருந்த இந்த கடலூர் நகராட்சி மாநகராட்சி மாற்றியது போல கடலூரை எழில்மிகு நகரமாக மாற்றி காட்டுவேன் என பேசிய அவர் வேட்பாளரை அறிமுகம் செய்துவைத்து ஆளும் கட்சியை சார்ந்த வேட்பாளரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Updated On: 16 Feb 2022 4:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  4. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  5. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  6. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  7. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  10. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...