/* */

தமிழக மதுபானம் போல் போலி ஸ்டிக்கர் ஒட்டி மதுபானங்கள் தயாரித்து விற்பனை

இது தொடர்பாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர்

HIGHLIGHTS

தமிழக மதுபானம் போல் போலி ஸ்டிக்கர் ஒட்டி மதுபானங்கள் தயாரித்து விற்பனை
X

புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்டம், பண்ருட்டிக்கு காரில் கடத்தி வரப்பட்ட போலி மதுபாட்டில்கள்

புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்டம், பண்ருட்டிக்கு காரில் போலி மதுபாட்டில்கள் கடத்திச் செல்லப்படுவதாக கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், துணை காவல் விஜயகுமார் தலைமையில் போலீசார், பண்ருட்டி ரயில் நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த காரை போலீசார் வழி மறித்து காரில் இருந்த 2 பேரிடம்போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை சேர்ந்த பரத்குமார், மற்றொருவர் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்த ஆரியப்பாளையத்தை சேர்ந்த சுதாகர் என்பதும், புதுச்சேரியில் இருந்து பண்ருட்டி பகுதிக்கு மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும், தமிழகத்தில் விற்பனையாகும் மதுபாட்டில்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் போன்று, போலியான ஸ்டிக்கர் தயாரித்து ஒட்டி கடத்தி வந்ததும் கண்டுபிடித்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் பரத், சுதாகர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 30 அட்டை பெட்டிகளில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 1440 மதுபாட்டில்கள் மற்றும் 100 லிட்டர் சாராயமும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 28 Aug 2021 5:15 PM GMT

Related News