/* */

கடலூர் டாக்ரோஸ் நிறுவன அன்னதான திட்ட விழாவில் அமைச்சர் பன்னீர்செல்வம்

கடலூர் டாக்ரோஸ் நிறுவன அன்னதான திட்டத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

கடலூர் டாக்ரோஸ் நிறுவன அன்னதான திட்ட விழாவில் அமைச்சர் பன்னீர்செல்வம்
X

கடலூரில் டாக்ரோஸ் நிறுவனத்தின் அன்னதான திட்டத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

கடலூர் முதுநகர் சிப்காட் தொழிற்பேட்டையில் டாக்ரோஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் டாக்ரோஸ் பவுண்டேஷன் சார்பில் அன்னதான திட்ட துவக்க விழா கடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கும் இந்த திட்டத்தினை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் டாக்ரோஸ் நிறுவனத்தின் சார்பில் அபிமன்யு ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்,

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தெரிவிக்கையில் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலாரின் மண்ணில் டாக்ரோஸ் நிறுவனம் சார்பில் செயல்படுத்தப்படும் அன்னதான திட்டம் சிறப்பான தொடக்கம் என்றார்.

மேலும் கடலூர் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் மீது தனக்கு அதிருப்தி இருப்பதாகவும், பொது மக்களை பாதிக்கக்கூடிய பல விஷயங்கள் இந்த சிப்காட் பகுதியில் உள்ளது. இவை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.




Updated On: 7 Oct 2021 11:33 AM GMT

Related News