/* */

கடலூர் அருகே வீட்டின் சமையலறையில் குக்கரில் பதுங்கியிருந்த நல்லபாம்பு

கடலூர் அருகே வீட்டு சமையலறை குக்கரில் பதுங்கியிருந்த நல்ல பாம்பை பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது.

HIGHLIGHTS

கடலூர் அருகே வீட்டின் சமையலறையில் குக்கரில் பதுங்கியிருந்த நல்லபாம்பு
X

கடலூர் அருகே குக்கரில் பதுங்கிய நல்ல பாம்பு.

கடலூர் கம்மியம்பேட்டை மீனாட்சி நகரை சேர்ந்தவர் இளமாறன். இவருடைய வீட்டு சமையல் அறைக்குள் வைக்கப்பட்டிருந்த குக்கருக்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த இளமாறன் குடும்பத்தினர் வீட்டை விட்டு அலறி அடித்தபடி ஓடி வந்தனர்.

பின்னர் இதுபற்றி பாம்பு பிடி வீரர் செல்லா என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் செல்லா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செல்லா குக்கரை திறந்து பார்த்தபோது சுமார் 4 அடி நீளமுள்ள அந்த நல்ல பாம்பு குக்கரில் இருந்து தப்பிக்க முயன்றது.

உடனடியாக பாம்பு பிடிக்கும் வீரர் தப்பிக்க முயன்ற நல்ல பாம்பின் வாலை லாவகமாக பிடித்தார். இருந்தும் அவரது பிடியில் இருந்து பாம்பு தப்பிக்க பலமுறை முயன்றது. பின்னர் அங்கிருந்து அந்த பாம்பை பாதுகாப்பாக பிடித்துச் சென்று அருகில் உள்ள வனப் பகுதிக்கு கொண்டு சென்று விட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 26 Jan 2022 12:55 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?