/* */

’இயற்கையை பாதுகாக்க வேண்டும்’ - அமைச்சர் மெய்யநாதன் வேண்டுகோள்

மனிதம் என்பதை கடந்து இயற்கையும் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

HIGHLIGHTS

’இயற்கையை பாதுகாக்க வேண்டும்’ - அமைச்சர் மெய்யநாதன் வேண்டுகோள்
X

அமைச்சர் மெய்யநாதன்

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி சுற்றுச்சூழல் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையிலும், மாணவர்களிடம் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் பணியை துவங்கியது. பல மாதங்கள் தொடர்ச்சியாக பணியாற்றி, மாணவர்களின் துணையுடன் மொத்தம் 79.73 டன் பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து கின்னஸ் நிறுவனத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. கின்னஸ் சாதனை நிறுவனத்தின் பிரதிநிதி ஸ்வப்னில் தங்கரிக்கர் முன்னிலையில், சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கை எடை போடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. கல்லூரி சார்பில் மறுசுழற்சிக்காக 79.73 டன் பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டது. இது கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “ப்ளாஸ்டிக் மறுசுழற்சி விழிப்புணர்வுக்காக கின்னஸ் உலக சாதனை படைத்த கல்லூரிகளுக்கு வாழ்த்துகள். யாரும் நினைத்தும், செய்ய முடியாத சாதனையை நீங்கள் செய்துள்ளீர்கள். ப்ளாஸ்டிக் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நினைக்கையில், எங்கு ப்ளாஸ்டிக் பார்த்தாலும் கோபம் வரும். ப்ளாஸ்டிக்கை தூக்கி எரிவது மிகவும் கொடுமை, இதனால் கேன்சர் போன்ற நோய்களை உருவாக்கும் அபாயம் உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் வேலை பார்க்க செல்லல்லாம். ஆனால் அதற்கு முன்பு இயற்கை பாதுக்காக்கும் பணியை நீங்கள் இன்று செய்துள்ளீர்கள். சாக்கடையில் கிடக்கும் ப்ளாஸ்டிகளையும் எடுத்து வந்து சேகரித்துள்ள உங்க பணியை பாராட்டுகிறேன்.

79 டன் ப்ளாஸ்டிக் சேகரிப்பால் நிறைய நன்மைகள் உள்ளது. இந்த மண்ணில் வாழும் நாம் இந்த ப்ளாஸ்டிக்கை பயன்படுத்திகிறோம். அதுவும் 15 நிமிடங்கள் தான் பயன்படுத்துகிறோம். ஆனால் அது தூக்கி எரிந்த பிறகு மக்கிப்போக 4500 ஆண்டுகள் ஆகும். மண், நீர் நிலைகள், வன விலங்குகள் போன்றவை அதிகளவில் பாதிப்படைகிறது. கடல் மீனில் கூட ப்ளாஸ்டிக் வருகிறது. அந்த மீன்களை உண்ணும் நமக்கு ஆபத்து தான். இயற்கையை யார் மாசு படுத்தினாலும், அவர்களுக்கு அந்த இயற்கையே பாதிப்பை திரும்பி தரும். க்ரீன் சாம்பியன் விருதை உங்கள் கல்லூரிக்கு கடந்த ஆண்டு முதல்வர் கொடுத்துள்ளார். அதை இன்று மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.

சுற்றுச்சூழல் பாதுக்காக்க 3விதமான திட்டங்களை முதல்வர் அறிமுகம் படுத்தியுள்ளார். காலநிலை மாற்றத்தை சமாளிக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறது. சோலார் எனர்ஜி பயன்படுத்த நாம் தொடங்க வேண்டும். நாமே சந்திக்ககூடிய பேரிடர்களை தவிர்க்க வேண்டும். இயற்கை நமக்கு அத்தனையும் தரும். அதை நாம் பாதுக்காக்க வேண்டும்.நடைப்பயிற்சி வயல்களில் பயணிக்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. இயற்கை நமக்கு ஆக்சிசன், உணவு போன்றவை தருகிறது. நாம் சுவாசிக்கும் ஆக்சிசனின் மதிப்பு 53கோடி ரூபாய். மனிதம் என்பதை கடந்து இயற்கையும் பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Updated On: 31 Jan 2024 3:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  7. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  8. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வைட்டமின்லாம் ரொம்ப ரொம்ப முக்கியமாம்! எப்படி