/* */

கச்சத்தீவு பற்றிய விவாதத்திற்கு தயாரா? அண்ணாமலை தி.மு.க.விற்கு சவால்

ஆவணங்கள் பொற் என்றால் கச்சத்தீவு பற்றிய விவாதத்திற்கு தயாரா? என அண்ணாமலை தி.மு.க.விற்கு சவால் விடுத்து உள்ளார்.

HIGHLIGHTS

கச்சத்தீவு பற்றிய விவாதத்திற்கு தயாரா? அண்ணாமலை தி.மு.க.விற்கு சவால்
X

வாக்கு சேகரிப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை

கோவை சின்ன தடாகம் பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ஆனைக்கட்டி, தடாகம் பகுதிகளில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. செங்கல் சூளை விவகாரத்தில் திமுகவினர் குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டி விடும் வேலையில் தான் ஈடுபட்டுள்ளனர். செங்கல் சூளை பிரச்சினை மத்திய அரசு சார்பாக சார்பாக எந்த வித பிரச்சனையும் வராது என உத்தரவாதம் கொடுக்கிறோம். இங்கு ஒரு விளையாட்டு மைதானம் கூட இல்லை. வாலிபால் மைதானம் கோரிக்கை வந்துள்ளது அதையும் ஏற்படுத்திக் கொடுக்க உள்ளோம்.

கச்சத்தீவு விவகாரம் குறித்தான முக்கிய ஆவணங்கள் இப்போதுதான் வெளியாகி, உண்மையான தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை இல்லாத ஒரு சூழல் வேண்டும். ஆழ்கடலில் மீனவர்கள் பாதுகாப்பாக மீன் பிடிக்க ஆர்டிகல் 6 தேவைப்படுகிறது. கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார். இரண்டு அரசுகள் பேசி முடிவு எடுக்க கூடிய விவகாரம் இது. சீமானுக்கு சின்னம் இல்லை ஓட்டும் இல்லை. சீமான் அண்ணாமலையின் ஸ்லிப்பர் செல்லா? இல்லை அண்ணாமலை சீமானின் ஸ்லீப்பர் செல்லா? பெண்கள், தாய்மார்கள் யாருக்கு ஆதரவாக உள்ளார்கள் என்று அனைவருக்கும் தெரியும். பாஜகவுக்கு ஆதரவு பெருகி உள்ளது. சீமான் இதையெல்லாம் பேச தான் செய்வார் பெரிதாக கண்டு கொள்ள வேண்டாம்.

கச்சத்தீவு திரும்ப பெற வேண்டுமென இரண்டு வருடங்களுக்கு முன்பு பாஜக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறது. தமிழக மீனவர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு கச்சத்தீவு நமக்கு தேவை. தனிப்பட்ட முறையில் மூன்று முறை இலங்கை சென்று அங்குள்ள அதிகாரியிடம் நான் பேசி உள்ளேன். இலங்கை அரசிடம் பேசி மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான நிரந்தரமான சூழல் ஏற்படுத்த வேண்டும். கச்சத்தீவு எப்படி கொடுக்கப்பட்டது அதனுடைய மர்மம் என்ன என்பதுதான் நாம் பேசி வருகிறோம். கச்சத்தீவை மீட்பதற்கு அறிவியல் பூர்வமாக பேசி வருகிறோம். நெய்தல் படை அனுப்பவோம், கப்பல் படை அனுப்புவோம் என்று நாங்கள் பேசவில்லை. கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பெறப்பட்ட ஆவணங்கள் பொய் என்றால் என்னிடம் விவாதத்திற்க வரச் சொல்லுங்கள்.

சுப்பிரமணிய சுவாமி பேசுவது பற்றி கோபம் வரத்தான் செய்யும். இத்தனை வருடமாக அவர்கள் என்ன செய்தார்கள்? ஐந்தாண்டு காலமாக சுப்பிரமணிய சாமி எந்த பொறுப்பில் இருக்கிறார்? சுப்பிரமணியசாமி யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். வயதின் காரணமாக அவரைப்பற்றி பேசாமல் இருக்கிறேன். அவர் பேசுவதை கண்டுகொள்ளாமல் இருப்பது தான் நல்லது. யாரையும் குடிக்க கூடாது என்று சொல்ல முடியாது. கள்ளுக் கடையைத் திறக்க வேண்டும் என வெள்ளை அறிக்கை கொடுத்துள்ளோம். டாஸ்மாக்கை மூடுவோம் கள்ளுக்கடையை திறப்போம் அதில் உறுதியாக இருக்கிறோம். டாஸ்மாக்கில் வரக்கூடிய பணம் ஒரு கட்சி சார்ந்த குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் செல்கிறது சாராயத்தை குடித்தால் மருத்துவமனையில் தான் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோம் அதில் ஆரோக்கியம் இல்லை” எனத் தெரிவித்தார்.

Updated On: 2 April 2024 8:11 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!