/* */

புதிய கட்டுப்பாடுகள் எதிரொலி: கோவையில் மால், தியேட்டர்கள் மூடல்

தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, கோவையில் வணிக வளாகங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

தமிழக அரசு அண்மையில் அறிவித்த கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகள், இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, கோவையில் புதிய கட்டுப்பாடுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மாவட்டத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், பெரிய பல்பொருள் அங்காடிகள் அனைத்தும் மூடியுள்ளன. அதேநேரத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சிறிய காய்கறிகடைகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
அத்துடன், எளிதில் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ள சலூன்கள், அழகு நிலையங்கள் உள்ளிட்டவையும் அடைக்கப்பட்டுள்ளன. தேநீர் கடைகள், உணவகங்கள், அரசின் புதிய கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன.

Updated On: 26 April 2021 9:06 AM GMT

Related News