/* */

கோவைக்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கீடு- வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

கோவைக்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

HIGHLIGHTS

கோவைக்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கீடு- வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
X

கோவையில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கிறார்.

கோவை காந்திபுரம் பாஜக மாவட்ட அலுவலகத்தில் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக பரவி வருகிறது. இந்தியாவிலேயே ஒரு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 234 பேருக்கு கொரோனா பாதிப்பு என்பது அதிகம் எனவும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கை வேண்டும். கோவை மாவட்டத்திற்கு கூடுதலான தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும். தினசரி 30 ஆயிரம் தடுப்பூசிகளை போடும் அளவிற்கு மாநில அரசு தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும்.

மாநில அரசுக்கு மத்திய அரசு குறைவான தடுப்பூசிகளை அளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆனால் மாநில அரசு கையிருப்பில் வைத்திருக்கும் தடுப்பூசியை மக்களுக்கு கொண்டு செல்லாமல் தொடர்ந்து மத்திய அரசிடம் தடுப்பூசிகளை கேட்டு வருகிறது.

கையில் இருக்கும் தடுப்பூசிகளை இரண்டு நாட்களில் மக்களுக்கு செலுத்த வேண்டும், ஆனால் அதை தவறவிட்டு கூடுதலாக ஊசிகளை மட்டும் கேட்கிறார்கள். மேலும் இந்தியாவிலேயே தமிழகம் தடுப்பூசிகளின் வீணாக்குவதில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

மத்திய அரசு வெளிநாடுகளிலும் உள் நாடுகளிலும் தடுப்பூசி தயாரிப்பில் தீவர கவனம் செலுத்தி வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அரசியல் செய்ய வேண்டாம் என பத்திரிகைகளில் குறிப்பிட்டு வருகிறார். ஆனால் மக்களுக்காக பணி செய்வதற்காக தான் நம் அரசியல் இருக்கிறோம் மக்கள் தேவையை பூர்த்தி செய்யுங்கள் அனைவரும் சேர்ந்தே அரசியல் செய்யலாம் என்ற பதிலையும் வானதி சீனிவாசன் வைத்தார்.

அதேபோன்று சமூக வலைதளங்களில் பாஜக வேட்பாளர்களுக்கு தல 13 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து அதில் பதில் கூற ஒன்றுமில்லை. தேர்தல் நேரத்தில் செலவுகள் குறித்து ஆணையத்திடம் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கேமராவுடன் அதிகாரிகள் பின் தொடர்ந்து கொண்டுதான் இருந்தார்கள். தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து கூடுதலான ஆக்சிசனை பெற்றுள்ளோம். அதேபோன்று தடுப்பூசிகளையும் கூடுதலாக கேட்டுள்ளோம். நான் கோவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி. எங்கள் மாவட்ட மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள் ஆகையால் தமிழகத்தில் ஒதுக்கு தடுப்பூசியில் கோவை மாவட்டத்திற்கென கொஞ்சம் கூடுதலாக தடுப்பூசிகள் ஒதுக்கவும் கோரிக்கையும் வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

Updated On: 28 May 2021 10:00 AM GMT

Related News