/* */

பாஜக தொண்டர்கள் போட்டியிட வாய்ப்பளிக்க தனித்து போட்டி: வானதி சீனிவாசன்

பாஜக வேட்பாளர் பட்டியல் தயாராகி வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளிவரும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

பாஜக தொண்டர்கள் போட்டியிட வாய்ப்பளிக்க தனித்து போட்டி: வானதி சீனிவாசன்
X

பத்திரிக்கையாளர்கள் சந்திபில் பேசிய வானதி சீனிவாசன்.

கோவை சித்தாபுதூர் பாஜக தலைமை அலுவலகத்தில் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது லாவன்யா தற்கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி அமைத்த மதுரை கிளை நீதிமன்றம் வழங்கித தீர்ப்பை பாஜக வரவேற்கிறது என்றார். மேலும் உயிரிழந்த மாணவி வாக்குமூலம் அடிப்படையில் குற்றச்சாட்டை வைத்துள்ளார், ஆனால் தமிழக காவல்துறை தற்கொலை வழக்கு விசாரணை செய்வதில் தவறியுள்ளது எனவும் மதமாற்றம் பற்றி வீடியோவில் பேசியுள்ளார். ஆனால் காவல் உயர் அதிகாரிகள் அதை மறுக்கிறார்கள். அதையே அமைச்சர்களும் தெரிவிக்கின்றனர். மேலும் முதலமைச்சர் மாணவியின் தற்கொலை வழக்கு விசாரணை குறித்து மக்களிடம் நீதி கிடைக்கும் என்ற உறுதியை அளிக்கவில்லை என குற்றச்சாட்டு வைத்தனர்.

சி.பி.ஐ விசாரனை செய்ய நீதிமன்றம் அளித்த இந்த தீர்பின் மூலம் மக்களின் நம்பிக்கை முதல்வர் இழந்து இருக்கிறார் எனவும் தெரிவித்தார். மதமாற்றத்தால் இதுபோன்ற உயிரிழப்பு இனி நடக்ககூடாது எனவும், ஆசைவார்த்தை கூறி, கட்டாயபடுத்தி மதமாற்றம் செய்யக்கூடாது என பாஜக கோரிக்கை வைக்கிறது என்றார். மேலும் மதமாற்றத்தை அரசு தடுக்க வேண்டும் எனவும் தேசிய தலைமையின் வழிக்காட்டுதலின் முடிவின் அடிப்படையில் தான் பாஜகவினர் தனித்து போட்டி போடுவதாக தெரிவித்தார். மேலும் அதிமுக மதிப்புமிக்க கூட்டாளிகள் எனவும் அவர்களை மதிக்கிறோம் என வானதி சீனிவாசன் தெரிவித்தார். அதிமுக, பாஜக இரண்டு கட்சிகளும் கட்சித் தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் தனித்து போட்டியிடுகிறோம். பாஜக வேட்பாளர் பட்டியல் தயாராகி வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வரும் எனவும் தெரிவித்தார்.

Updated On: 31 Jan 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...