/* */

கட்சி கம்பங்களில் தேசியக்கொடி; உடனடியாக அகற்றிய போலீசார்

கோவையில், கட்சி கொடிகளுக்கு கீழ் கட்டப்பட்டிருந்த தேசியக்கொடிகளை, போலீசார் உடனடியாக அகற்றினர்.

HIGHLIGHTS

கட்சி கம்பங்களில் தேசியக்கொடி; உடனடியாக அகற்றிய போலீசார்
X

கோவையில் கட்சி கம்பங்களில் கட்டப்பட்டிருந்த தேசியக்கொடிகளை, போலீசார் அகற்றினர்.

நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களுக்கு அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடுமாறு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று முதல் மக்கள், தங்களது இல்லங்களில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர். பல்வேறு கட்சியினரும் அவர்களது அலுவலகத்தில், தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர்.

இந்த ஆண்டு சுதந்திர தினவிழா விமரிசையாக கொண்டாடுவதற்காக தேசியக்கொடி ஏற்றுவதில், விதிகளுக்கு உட்பட்டு திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. தேசியக்கொடியை தனி கம்பத்தில்தான் ஏற்ற வேண்டும்; கட்சி கம்பங்களில் ஏற்ற கூடாது என விதி இருக்கும் போது, கோவை ஒலம்பஸ் பகுதியில் அதிமுக கொடி கம்பத்தில், கட்சி கொடிக்கு கீழ் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ள்து. அதிமுக கட்சி கொடி மேலேயும், தேசியக்கொடி கீழேயும் கட்டப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே இந்து அமைப்பின் கொடி கம்பத்திலும் இந்து அமைப்பின் கட்சி கொடிக்கு கீழ், தேசியக் கொடி கட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்து, அங்கு சென்ற போலீசார், தேசியக்கொடியை கட்சி கம்பத்தில் இருந்து உடனடியாக அகற்றினர்.

Updated On: 14 Aug 2022 5:16 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!