/* */

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

சுகாதாரதுறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
X

சுகாதார ஆய்வாளர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டம்.

தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையில் கடந்த 1990களில் 4038 சுகாதார ஆய்வாளர் நிலை ஒன்று மற்றும் 4561 சுகாதார ஆய்வாளர்கள் நிலை இரண்டு என பணியிடங்கள் என எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் இருந்தது. கடந்த 2003 முதல் இந்த பணியிடங்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் பல்வேறு தனித் திட்டங்களுக்கான ஒப்பளிக்கப்பட்ட 1002 சுகாதார ஆய்வாளர்கள், நிலை 1 பணியிடங்களை மீளப்பெற்று, அரசு ஒப்புதல் கோரி இயக்குனர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை ஆகிய துறைகளில் 1002 சுகாதார ஆய்வாளர்கள் நிலை ஒன்று பணியிடங்களுக்கு அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுகாதார துறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு உண்ணா விரதம் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்ற இதில், பொருளாளர் அருண் முன்னிலை வகித்தார். இதில் கோவை,திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 1 Nov 2021 10:00 AM GMT

Related News