/* */

சொத்துவரி விதிப்பு எண்களுடன் ரேஷன் கார்டை இணைக்க, கோவை மாநகராட்சி அறிவுறுத்தல்

Coimbatore News, Coimbatore News Today-குடியிருப்புதாரர்கள் தங்களது சொத்துவரி விதிப்பு எண்களுடன், ரேஷன் கார்டை இணைக்க வேண்டும் என, கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

சொத்துவரி விதிப்பு எண்களுடன் ரேஷன் கார்டை இணைக்க, கோவை மாநகராட்சி அறிவுறுத்தல்
X

Coimbatore News, Coimbatore News Today-கோவை மாநகராட்சி அலுவலகம் (கோப்பு படம்)

Coimbatore News, Coimbatore News Today-கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;

நகராட்சி நிர்வாக சாப்ட்வேரில் உள்ள வரி விதிப்புதாரர்களின் விவரங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதையொட்டி கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்புதாரர்களும் தங்களது சொத்துவரி விதிப்பு எண்களுடன் ரேஷன் அட்டையை இணைக்க வேண்டும். வணிக நிறுவனங்கள் தங்களது சொத்துவரி விதிப்பு எண்ணுடன் பான் அட்டை அல்லது ஜி.எஸ்.டி எண்கள் குறித்த விபரங்களை இணைப்பது அவசியம். மேலும், மாநகராட்சியின் வரியில்லா இனங்களின் குத்தகைதாரர்கள் குத்தகை ஒதுக்கீட்டு எண்ணுடன் பான் அட்டை அல்லது ஜி.எஸ்.டி எண்ணை இணைக்க நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட குடியிருப்புதாரர்கள் தங்களது சொத்து வரி விதிப்பு புத்தக நகல் மற்றும் ரேஷன் கார்டு நகல் போன்ற ஆவணங்கள் உடன் வர வேண்டும். இதேபோல் மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவன உரிமையாளர்கள் தங்களது சொத்து வரி புத்தக நகல் அல்லது பான் அட்டை அல்லது ஜி.எஸ்.டி ஆவணங்களுடன் வருவது அவசியம்.

மேலும் மாநகராட்சி வரியில்லா இனங்களுக்கான வருடாந்திர குத்தகை இன குத்தகைதாரர்கள் மற்றும் மாதாந்திர கடை உரிமைதாரர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட குத்தகை எண்களின் விவரத்துடன் தங்களது பான் அட்டை அல்லது ஜி.எஸ்.டி எண்களுக்கான ஆவண நகல்களுடன் வர வேண்டும்.

வார வேலை நாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை, சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களை நேரில் அணுகி இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் வரும் 31.01.2023-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். வரும் ஜன. 31ம் தேதி வரை மட்டுமே, இதற்கான கால அவகாசம், கோவை மாநகராட்சி பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்.

உயர்த்தப்பட்ட சொத்துவரி விவரம்

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. அதன்படி, 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதமும், 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதமும், 1800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 75 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

அதுவே 1800 சதுர அடிக்கு மேல் குடியிருப்பு கட்டடங்கள் இருந்தால், அவற்றுக்கு 100 சதவீத சொத்து வரி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 25 Dec 2022 9:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’