/* */

புதையலில் கிடைத்த நகை என கூறி திருப்பூர் ஓட்டல் உரிமையாளரிடம் மோசடி

புதையலில் கிடைத்த நகை என கூறி திருப்பூர் ஓட்டல் உரிமையாளரிடம் மோசடி
X

திருப்பூர் மண்ணரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் பாலு(வயது45). இவர் அங்கு ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த மாதம் 15ம் தேதி இவரது ஓட்டலுக்கு பெண் உட்பட 3 பேர் வந்துள்ளனர். அவர்கள் உணவு சாப்பிட்டு விட்டு ஓட்டல் உரிமையாளரிடம் தங்களை அறிமுகப்படுத்தினர். அவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் அதில் ஒரு நபர், நாங்கள் கோவையில் மேம்பால பணியில் ஈடுபட்டு வருகிறோம். அப்போது ஒரு நாள் குழி தோண்டும்போது அங்கு தங்க புதையல் கிடைத்தது. ஒரு குடுவையில் தங்க கட்டிகள் இருந்தன. அதனை குறைந்த விலையில் விற்க உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு தங்க கட்டியை சாம்பிளுக்கு காட்டியுள்ளனர். மேலும் கோவை காந்திபுரம் வந்தால் ரூ. பல லட்சம் மதிப்பிலான அந்த தங்க கட்டிகளை வெறும் ரூ.5 லட்சத்திற்கு தருகிறோம் என தெரிவித்துள்ளனர். அவர்கள் பேச்சில் மயங்கிய பாலு இதனை உண்மை என நம்பியுள்ளார். தொடர்ந்து கடந்த மாதம் 20ம் தேதி பணத்துடன் பாலு காரில் கோவை சென்றுள்ளார். காந்திபுரத்தில் வைத்து அந்த நபரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவர் நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஒரு தமிழ்நாடு ஓட்டல் முன்பு தங்க கட்டிகளுடன் நின்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அங்கு சென்ற பாலு அங்கு நின்றிருந்த 3 பேரிடம் ரூ. 5 லட்சம் கொடுத்து தங்க கட்டி என நினைத்து போலி தங்கத்தை வாங்கி திருப்பூர் சென்றார். பின்னர் அந்த நகைகளை சோதனை செய்தபோது அவை அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலியான தங்கம் என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலு இது குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி தங்க கட்டி கொடுத்து மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். போலி தங்க கட்டி கொடுத்து ரூ. 5 லட்சம் மோசடி நடைபெற்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நவீன காலகட்டத்தில் பல விழிப்புணர்களை ஏற்படுத்தினாலும் தங்கத்தின் மீது உள்ள ஆசையால் பல நபர்கள் இப்படி ஏமாற்ற படுகிறார்கள் என்பதற்கு இந்த செய்தி எடுத்துக்காட்டாக உள்ளது .

Updated On: 3 July 2022 5:33 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!