/* */

மிகப்பெரிய பகுத்தறிவாதி விவேக் - ஆ.ராசா

மிகப்பெரிய பகுத்தறிவாதி விவேக்  - ஆ.ராசா
X

திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் இல்லாத காரணத்தினால் அவர் சார்பில் நடிகர் விவேக் உடலுக்கு ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை, சாலிகிராமம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த நடிகர் விவேக்கின் உடலுக்கு இன்று (ஏப். 17), திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் நேரில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, ஆ.ராசா செய்தியாளர்களிடம் பேசுகையில், திரையுலகில் ஒரு மிகப்பெரிய பகுத்தறிவுக் கொள்கைகளால் விவேக் பெற்ற இடத்தை ஈடுசெய்வதற்கு திரையுலகம் வெகு காலம் போராட வேண்டியிருக்கும் என்பது எங்களின் தாழ்மையான கருத்து. அவரை இழந்து வாடும் திரையுலகத்துக்கும் குடும்பத்தினருக்கும் திமுக தலைவர் சார்பிலும், திமுக சார்பிலும் எங்களின் ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறோம். என கூறினார்.

Updated On: 17 April 2021 8:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  4. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  5. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  6. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  7. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  8. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  9. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  10. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை