/* */

தமிழகம் தொற்றில்லா மாநிலமாகமாறும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை

*தமிழகம் விரைவில் தொற்றில்லாத மாநிலமாக உருவெடுக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்*

HIGHLIGHTS

தமிழகம் தொற்றில்லா மாநிலமாகமாறும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை
X

சைதாப்பேட்டையில்  யோகா மற்றும் இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த மூலிகைகளை பார்வையிட்டார். 

சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கலைக்கல்லூரி வளாகத்தில் 120 படுக்கைகள் கொண்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னையில் முதல் மையமாக 120 படுக்கைகளுடன் கூடிய யோகா மற்றும் இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 11 இடங்களில் யோகா மற்றும் இயற்கை கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.

மேலும் 3 வார காலத்தில் 50 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மக்களிடையே கொரோனா சிகிச்சைக்கு சித்தா மற்றும் இயற்கை மருத்துவ வழிமுறைக்கு வரவேற்பு உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகம் விரைவில் தொற்றில்லாத மாநிலமாக உருவெடுக்கும். தமிழகத்தில் 269 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் உள்ளது. துவக்க காலத்தில் பணிச்சுமை காரணமாக பரிசோதனை முடிவு வெளியாவதில் தாம தமானது.கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதில் தற்போது பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளி வருகிறது. எங்கேனும் பரிசோதனை முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால் புகார் தெரிவித்தால் சரி செய்யப்படும். தமிழகம் முழுவதும் போதுமான ஆம்பூலன்ஸ்கள் உள்ளது. சென்னை மாநகராட்சியின் கார் ஆம்பூலன்ஸ் திட்டத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

Updated On: 31 May 2021 11:47 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!