/* */

கோழிமுட்டை ரூ.2.24 க்கு விற்பனை-விளம்பரங்களை நம்ப வேண்டாமென காவல்துறை வேண்டுகோள்

700 ரூபாய் முதலீடு வாரம் 6 முட்டை- பொதுமக்களிடம் விநோத விளம்பரங்களை நம்ப வேண்டாமென பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

கோழிமுட்டை ரூ.2.24 க்கு விற்பனை-விளம்பரங்களை நம்ப வேண்டாமென காவல்துறை வேண்டுகோள்
X

700 ரூபாய் முதலீடு வாரம் 6 முட்டை- பொதுமக்களிடம் விநோத விளம்பரங்களை நம்ப வேண்டாமென பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒரு கோழி முட்டையை ரூ. 2.24க்கு விற்க முடியுமா?


சில நாட்களுக்கு முன்பாக தமிழ் நாட்டின் முன்னணி நாளிதழ்களில் ஒரு முட்டை ரூ. 2.24 க்கு வழங்கப்படும் எனவும் இதற்காக பணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டுமெனவும் மிகப் பெரிய அளவில் விளம்பரங்கள் வெளிவந்தன. கோழி முட்டை மொத்த விற்பனை மையங்களிலேயே நான்கு ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் நிலையில், ரூ. 2.24க்கு முட்டையை எப்படி விற்பனை செய்ய முடியுமென பலருக்கும் கேள்விகள் எழுந்தன.

நாளிதழ் ஒன்றில் கடந்த 18-ம் தேதி Rafoll retails pvt ltd egg mart என்ற நிறுவனம் ஒரு முட்டையின் விலை 2.24 பைசா மட்டுமே எனவும் 700 ரூபாய் முதலீடு செய்தால் வாரம் 6 முட்டைகள், 1400 முதலீடு செய்தால் வாரம் 12 முட்டைகள், 2800 முதலீடு செய்தால் 24 முட்டைகள் டோர் டெலிவரி செய்யப்படும் என விளம்பரம் கொடுத்தது.

இந்த விளம்பரத்தை கண்ட பொதுமக்கள் பலர் குறைந்த விலையில் முட்டை கிடைப்பதாக நினைத்து சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு பணத்தை முதலீடு செய்தனர். இதனை கண்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மோசடி விளம்பரம் போல் இருப்பதாக நினைத்து சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர்.

கடந்த 20 ஆம் தேதி நிறுவனரான அரக்கோணத்தை சேர்ந்த சிவம் நரேந்திரன் கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். இவரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் முறையான உரிமம் பெறாமல் திருமுல்லைவாயிலில் நிறுவனம் நடத்தி வருவது தெரியவந்தது.

மேலும் விளம்பரத்தை பார்த்து பொதுமக்கள் அனுப்பிய பணத்திற்கு அவர்கள் எந்தவிதமான ரசீதையும் பொதுமக்களுக்கு வழங்கவில்லை என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த விளம்பரத்தை பார்த்து தமிழகம் முழுவதும் 310 நபர்கள் திட்டத்திற்கேற்ப இந்த நிறுவன வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தியது கண்டறியப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அனுப்பிய 4.5லட்ச ரூபாய் பணத்தை சம்மந்தப்பட்ட வங்கி கணக்கிற்கே போலீசார் திரும்ப அனுப்பினர். ஏற்கெனவே நரேந்திரன் இந்த நிறுவனத்தின் மூலமாக பலசரக்கு வியாபாரம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து உரிமம் பெறாத கம்பெனியை மூடி, இந்த நிறுவனத்தின் இணையதள பக்கத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர். இனி இந்த இணையதளம் மூலமாக பொதுமக்கள் பணத்தை அனுப்பமுடியாத படி செய்தனர்.

மேலும் குறைந்த விலையில் பொருட்கள் தருவதாக கூறி வரக்கூடிய கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி பொதுமக்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனவும் தீர விசாரித்து பணத்தை முதலீடு செய்யுமாறு பொதுமக்களிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கேட்டு கொண்டனர்.




Updated On: 30 July 2021 6:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா