/* */

வியாசர்பாடியில் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடி கைது

சென்னை வியாசர்பாடியில் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

வியாசர்பாடியில் கத்தியை காட்டி  பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடி கைது
X
கைது செய்யப்பட்ட ரவுடி காளியா.

சென்னை எம்.கே.பி. நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட உதயசூரியன் நகர் பூங்கா அருகே மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்துவதாக எம்.கே.பி. நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற எம்.கே.பி. நகர் சப் இன்ஸ்பெக்டர் மனோஜ் உள்ளிட்ட போலீசார் அங்கு குடி போதையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் கொடுங்கையூர் சுப்பிரமணி தெரு பகுதியை சேர்ந்த யோகேஷ் என்கின்ற காளியா(வயது 23 )என்பதும் இவர் மீது ஏற்கனவே எம்.கே.பி. நகர் வியாசர்பாடி கொடுங்கையூர் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து எம்.கே.பி. நகர் போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள கத்தியையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 7 March 2022 6:14 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்