/* */

சென்னை பத்மாவதி தாயார் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

GN Chetty Road Padmavathi Temple-சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.

HIGHLIGHTS

சென்னை பத்மாவதி தாயார் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
X

சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.

GN Chetty Road Padmavathi Temple-சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில், சம்ப்ரோக்ஷண நாளான இன்று காலை 4 மணி முதல் 5 மணி வரை சதுஸ்தான அர்ச்சனை, ப்ராணபிரதிஷ்டா ஹோமம், பிராணதி தாஷவாயின் யாஸ் ஹோமம், மகாசாந்தி செய்து வருகின்றனர். ஹோமம், ஆலய பிரதக்ஷிணா நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, காலை 7.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பிரதம ஆராதனம், கோப்ருஷ்டா, தர்ப்பணம், கன்யா, ஹேமாதிதர்ஷணமும், தொடர்ந்து காலை 10 மணிக்கு பத்மாவதி, ஸ்ரீனிவாசர் கல்யாண உற்சவமும் நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் ராமானுஜர், விஸ்வசேனா சிலைகளும் இடம் பெற்றுள்ளன. கோயில் கட்டி முடிக்கப்பட்டு கொடிமரப் பிரதிஷ்டை நடந்தது. இதையடுத்து, திருப்பதியில் வடிவமைக்கப்பட்ட பத்மாவதி தாயார், துவார பால கர்களான வனமாலி, பலாக்கினி சிலைகள், மூல விக்கிரகங்கள், கலசங்கள் சென்னை தியாகராய நகருக்கு கொண்டு வரப்பட்டன. மூலவர் சிலைகளை, நெல் லில் பிரதிஷ்டை செய்து, ஜலதி வாசம் செய்யப்பட்டு நேற்று முன் தினம் பாலாபிஷேகம் நடத்தப்பட் டது. தொடர்ந்து, மூல விக்கிரக பிரதிஷ்டை நேற்று நடந்தது. காலை 7 மணி முதல் சதுஷ்டான தியாகராய நகர் ஜி.என். செட்டி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்tpறது.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் சேகர் ரெட்டி நேற்று கூறும்போது, "இடப்பற்றாக்குறையால், கும்பாபி ஷேகத்தின் போது கோயிலுக்குள் அதிக அளவில் பக்தர்கள் வர முடியாத சூழல் இருக்கிறது. கும்பா பிஷேகம் முடிவடைந்ததும் காலை 11 மணி முதல் இரவு வரை பொதுமக்கள், சுவாமி தரி சனம் செய்யலாம். பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய் யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அற நிலையத் துறை அமைச்சர் கலந்து கொள்கிறார்'' என்றார்.


கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும், பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு-புதுச்சேரி ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி தலைமையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் செய்து வருகின்றனர்.


ஜி.என்.செட்டி சாலையில் பழம் பெரும் நடிகை காஞ்சனா வழங்கிய 6 கிரவுண்ட் நிலத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.10 கோடி செலவில் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டுள்ளது. வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ள இந்த கோயிலில் மண்டபம், மடப்பள்ளி, புஷ் கரணி, வாகன நிறுத்துமிடம் போன் றவை அமைந்துள்ளன. கோயி லின் ராஜகோபுரம் மூன்று நிலை அர்ச்சனை, மூர்த்தி ஹோமம், களை கொண்டது, இதில் கலைநய மிக்க சிற்பங்களும் உள்ளன. கருவறையின் எதிரே பலிபீடம் உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 March 2024 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...