/* */

household essential things rate hike- இல்லத்தரசிகளின் துாக்கத்தைக் கலைக்க வைத்த விலைவாசி உயர்வு:அரசு கட்டுப்படுத்துமா?

household essential things rate hike- தமிழகத்தில் அரிசி, பருப்பு ,காய்கறி விலையானது அடிக்கடி உயர்த்தப்படுவதால் ஏழை நடுத்தரக்குடும்பத்தினர் பெருமளவில் பாதிப்படைந்து வருகின்றனர். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

household essential things rate hike-  இல்லத்தரசிகளின் துாக்கத்தைக் கலைக்க   வைத்த விலைவாசி உயர்வு:அரசு கட்டுப்படுத்துமா?
X

அய்யோ...சாமி என்னைய விட்டுவிடு என்று விலைவாசி யானையைக் கண்டு மிரண்டு ஓடும்  இல்லத்தரசி(கோப்பு படம்)

household essential things rate hike


தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான மளிகை மற்றும் காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் துாக்கத்தைத் தொலைத்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் அரிசி விலை 20 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டது. இதனால் மாதக் கடைசியில் கையில் இருக்கும் பணத்தை வைத்து குடும்பத்திற்கான பொருட்களை வாங்க முடியாமல் திணறி வருகின்றனர். வி்லைவாசியானது திடீர் திடீர் என உயர்வதால் எப்படி குடும்பம் நடத்துவது? என்ற கேள்வி இல்லத்தரசிகளிடையே எழுந்து அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

சாப்பாட்டிற்கு பயன்படுத்தும் அரிசி, பருப்பு வகைகளின் விலையானது வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. துவரம்பருப்பு கிலோ ரூ.155 க்கும் உளுத்தம்பருப்பு ரூ. 130 க்கும் விற்கப்படுகிறது. தரமான அரிசியானது கிலோ ஒன்றுக்கு ரூ. 10 வரை உயர்த்தப்பட்டுள்ளதால் நடுத்தர குடும்பத்தினர் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.

household essential things rate hike


இது :போதாதென்று காய்கறிகளின் விலைகளைக் கேட்டாலே தலை சுற்றுகிறது. அதுவும் தக்காளி தங்கத்தினைப் போல் அன்றாடம் விலையானது ஏறி இறங்கி வருவதால் மார்க்கெட்டிற்கு செல்லும் பெண்கள் தக்காளியைக் கண்ணால் மட்டுமே பார்த்துவிட்டு வரும் நிலையே தொடர்கிறது. அவர்களால் காசு கொடுத்து வாங்க முடியவில்லை. நீங்களே சொல்லுங்களேன்... ரூ. 100 கையில் இருந்தால் ஒரு வாரத்திற்கு காய் வாங்கலாம் என்ற நிலை மாறி தற்போது ரூ. 100இருந்தால் தக்காளி மட்டும் 1 கிலோ வாங்கி வரலாம் என்ற நிலைதான் தொடர்கிறது.

இடைத்தரகர்கள் காட்டில்மழை

விளைச்சலுக்காக சாகுபடி காலங்களில் சாப்பாடு இல்லாமல் குடிநீர் இல்லாமல் பயிர்களைக் காத்து அறுவடை செய்து எடுத்து வரும் விவசாயிகளுக்கு இந்த விலையேற்றத்தினால் எந்த பயனுமே இல்லை. இடைத்தரகர்கள் காட்டில்தான் தற்போது மழை பெய்து வருகிறது. விவசாயிகளுக்கு ஒரு விலையைக் கொடுத்து விட்டு இவர்கள் இஷ்டத்துக்கு விலையை நிர்ணயம் செய்து விற்கின்றனர். அரசு சார்பில் உழவர் சந்தை இயங்கி வந்தாலும் அங்கு கடை விரிக்கும் விவசாயிகளுக்கு இவ்வளவுதான் கட்டுப்பாடுகள் என்பது இல்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது.

இதனால் பல விவசாயிகள் மனஉளைச்சலுக்கு பயந்துகொண்டு கடை விரிப்பதையே தவிர்த்து வருகின்றனர். நியாயமான விலை என்றாலும் அங்கும் ஒரு சிலர் மொத்தமாக குறைந்த விலைக்கு வாங்கி வந்து வெளிக்கடைகளில் அதிக விலைக்கு விற்பது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு ஒரு சில அதிகாரிகளும் துணை நிற்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.பசுமைக்கடைகளில் தக்காளி ரூ. 60 என விற்கப்பட்டாலும் அது சாதாரண பொதுமக்களுக்கு கிடைப்பதில்லையே. இதிலும் புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகமாகிவிட்டதே.

household essential things rate hike


அரசு கட்டுப்படுத்த வேண்டும்

விலைவாசி உயர்வு என்பது அவ்வப்போது அறிவிப்பில்லாமல் விலையை உயர்த்துவது அல்ல. முறைப்படி அறிவிக்க வேண்டும். ஆனால் இன்றைய காபிதுாள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அவர்களுடைய பொருட்களுக்கான விலையினை திடீரென உயர்த்தி வருகின்றனர். இவர்களையெல்லாம் யார் கட்டுப்படுத்துவது? இதுபோல் பல பொருட்களின் விலையினை திடீர் திடீர் என உயர்த்துவதால் சாதாரண நடுத்தரக்குடும்பத்தினர் பெருமளவில் பாதிப்படைந்து வருகின்றனர்.

இவர்களைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கும்போது நமக்கு அன்றாடம் உபயோகமாகும் பொருட்களின் விலையானது தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஆனால் எங்களுடைய சம்பளம் மட்டும் உயராமல் அதே சம்பளத்தில் வேலை பார்க்கிறோம். எப்படி எங்களால் குடும்பம் நடத்தமுடியும் என்று குரலெழுப்புகின்றனர். அரசு இதற்கான நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

household essential things rate hike


விலைப்பட்டியல் தேவை

முன்பெல்லாம் மளிகைக்கடைகளில் வாசலில் விலை பற்றிய போர்டு இருக்கும். வாடிக்கையாளர்கள் அதனைப் பார்த்து வாங்கி சென்றனர். ஆனால் தற்போது எந்த கடைகளிலும் விலைப்பட்டியல் என்பதைக் காண்பதே அபூர்வமாகி வருகிறது. ஏன்? பல ஹோட்டல்களில் கூட பலருக்கும் சாப்பிட்ட பின்னர்தான் விலையே தெரிகிறது. சட்டப்படி அவர்கள் ஒவ்வொருவருமே நுகர்வோர் அறியும் வகையில் முறைப்படி விலைப்பட்டியலை அனைவரின் கண்களுக்கு தெரியும்இடத்தில் வைக்கவேண்டும் என்பதே சட்டம்.

ஆனால் பலர் இதனை முறைப்படி ஃபாலோ செய்வதே இல்லை. பலருக்கும் சாப்பிட்டு முடித்தபின்புதான் விலையே தெரிய வருகிறது. இதனை அரசு அதிகாரிகள் கண்காணித்து அனைத்துக் கடைகளிலும் தினந்தோறும் விலைப்பட்டியல் வைத்து அதனை அப்டேட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தவேண்டும். அதேபோல் அனைத்து ஹோட்டல்களிலும் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதோடு, விலை வாசி உயர்வு என்ற தகவல் வந்ததுமே பொருட்களைப் பதுக்கும் வியாபாரிகள் மீது வழக்கு பதிய வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 3 July 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு