/* */

சென்னையில் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்களுக்கு பெண்கள் தர்மஅடி !

சென்னை துரைப்பாக்கத்தில் அரசு நிலத்தை அபகரிக்க முயன்றவர்களை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

சென்னையில்  நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்களுக்கு பெண்கள் தர்மஅடி !
X

சென்னை துரைப்பாக்கம், கல்லுக்குட்டையில் நீர்நிலை நிறைந்த பகுதி உள்ளது. இதனை சுற்றி 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் இங்குள்ள காலி இடங்களை, அதிமுகவை சேர்ந்த சிலர் வளைத்துப்போட்டு, ரூ. 2லட்சம் முதல் 5 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வந்தனர்.

இது தொடர்பாக, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சோழிங்கநல்லுாரை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலர் மீது நடவடிக்கை எடுத்தார். ஆட்சி மாற்றத்துக்கு பின் தி.மு.கவினர் என்று கூறப்படும் சிலர் அதேபோல் இடங்களை ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயன்றதாக தெரிகிறது. திருவள்ளுவர் நகரில் உள்ள சில இடங்களை, போலி ஆவணம் தயார் செய்து விற்பனை செய்வதாகவும் தெரியவந்துள்ளது.

இதன்படி, தி.மு.க வை சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் சிலர் அந்த இடத்தின் முகப்பில் இருந்த குடிநீர் தொட்டியை அகற்றி, இடத்தை பாதுகாக்க சுற்றி வேலி அமைக்க முயன்றுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த துரைப்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்பகுதி பெண்கள், போலீசார் கண்முன்னே, ஆக்கிரமிக்க வந்த நபர்களை விறகு கட்டை, துடைப்பம் கொண்டு சரமாரியாக தாக்கினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு இடத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக ரமேஷ்மணிகண்டன், ராஜலிங்கம், சத்யா உள்ளிட்டோர் மீது, துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 14 Jun 2021 9:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?