/* */

மாணவர்களின் நலனுக்காக விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டும் : அரசுக்கு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை

மாணவர்களின் கல்வித் திறனை கருத்தில் கொண்டு விரைவில் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

மாணவர்களின் நலனுக்காக விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டும் :  அரசுக்கு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை
X

தமிழக அரசு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை: மாணவர்களின் கல்வித் திறனை கருத்தில் கொண்டு விரைவில் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மாணவர்களின் கல்வித் திறனை கருத்தில் கொண்டு நேரடி வகுப்பு நடத்த ஏதுவாக, விரைவில் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, தற்காலிக அங்கீகாரம் முடிந்த பள்ளிகளுக்கு, கொரோனா சூழலை கருத்தில் கொண்டு உடனடியாக மேலும் 3 ஆண்டுகள் அங்கீகாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் தனியார் பள்ளிகளில் முகாம் அமைத்து, அந்தந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புதிய பாடத் திட்டம், தேர்வுமுறை சீர்த்திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக கல்வியாளர் குழுக்களை அமைத்து, அதில் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 13 July 2021 10:16 AM GMT

Related News