/* */

தொல்லியல் படிப்புக்கு விண்ணப்பிக்க செப். 16ம் தேதி கடைசி நாள்

தொல்லியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு, நாளை மறுதினத்தோடு (செப். 16) நிறைவடைகிறது.

HIGHLIGHTS

தொல்லியல் படிப்புக்கு விண்ணப்பிக்க செப். 16ம் தேதி கடைசி நாள்
X

மாதிரி படம்

தமிழக தொல்லியல் துறை சார்பில், இரண்டாண்டு கால முழுநேர தொல்லியல் முதுகலை பட்டயப்படிப்பு கற்பிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வினியோகிக்கப்படுகிறது. முதுநிலை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க, நாளை மறுதினம் (செப். 16,) கடைசி நாள் ஆகும்.

இந்த படிப்பில் சேர, முதுகலை, முதுநிலை அறிவியல், முதுநிலை பொறியியல் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில், 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தகுதியான மாணவர்களுக்கு வருகிற 25ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, நேர்முகத்தேர்வின் வாயிலாக 20 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அடுத்த மாதம், இப்படிப்புக்கான வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. இந்த படிப்புக்கான விண்ணப்பங்களை www.tnarch.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, நாளை மறுதினத்திற்குள் பூர்த்தி செய்து, 'ஆணையர், தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை, - 8' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, tnarchioa2021batch@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 044- - 2819 0020 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 Sep 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  3. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  4. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  6. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  7. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  8. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராவுடன் இணைத்திருந்த...
  9. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  10. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...