/* */

4 விமானங்களில் 50 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் : சென்னை வந்தடைந்தன

4 நாடுகளில் இருந்து 4 சரக்கு விமானங்களில் 50 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சென்னை வந்தடைந்தன.

HIGHLIGHTS

4 விமானங்களில் 50 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் : சென்னை  வந்தடைந்தன
X

சென்னை விமான நிலையத்தில் வந்து இறக்கப்படும் ஆக்சிஜன் கருவிகள்.

அமெரிக்கா,இங்கிலாந்து,ஹாங்காங்,சீனாவிலிருந்து 4 சரக்கு விமானங்களில் 50 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சென்னை விமானநிலையம் வந்தடைந்தன.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் பெருமளவு பரவி வருகிறது.ஏற்கனவே நாட்டின் வட மாநிலங்களில் பெருமளவு தாக்குதல் நடத்திய கொரோனா வைரஸ்,தற்போது தென்மாநிலங்களிலும் வீரியம் எடுத்துள்ளது.அந்த நிலையில் தமிழகத்திலும் பாதிப்பு அதிகரித்துள்ளது.குறிப்பாக சென்னை,கோவை,செங்கல்பட்டு,திருவள்ளூா்,திருப்பூா்,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதிலும்,வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஆக்சிஜனை தமிழகம் கொண்டு வருவதற்கும் தமிழக முதலமைச்சா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். இதற்கிடையே தனியாா் நிறுவனங்கள்,மருத்துவமனைகள்,தொண்டு நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளை பெருமளவு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன. அரசும் அதற்கு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு அமெரிக்கா,இங்கிலாந்து, சீனா,ஹாங்காங்கிலிருந்து 4 சரக்கு விமானங்கள் சென்னை பழைய விமானநிலைய சரக்கக பிரிவுக்கு வந்தன. அந்த விமானங்களில் 50 ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள் வந்திறங்கின. நள்ளிரவாக இருந்தாலும்,மற்ற பணிகளை எல்லாம் நிறுத்தி வைத்துவிட்டு, இந்த 50 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளையும் உடனடியாக டெலிவரி கொடுத்து அனுப்பினா். மருத்துவ உபகரணங்கள் டெலிவரி செய்வதில் காலதாமதம் ஏற்படாமல் செயல்படுவதை கண்காணிக்க சுங்கத்துறை மற்றும் விமானநிலைய அதிகாரிகள் இணைந்து ஒரு குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Updated On: 21 May 2021 8:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?