/* */

புதிய கல்விக்கொள்கையை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம்: அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை நுழையாமல் இருக்க துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

HIGHLIGHTS

புதிய கல்விக்கொள்கையை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம்: அமைச்சர் பொன்முடி
X

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

சென்னை, தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறைமைச்சர் பொன்முடி, கடந்த காலங்களில் கல்வித்துறையில் குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம்.மற்றும் திறந்த வெளி பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

தேர்விற்கான தொகையை 23 தனியார் கல்லூரிகள் கட்டாமல் உள்ளனர். வரும் திங்கள்கிழமைக்குள் பணத்தை கட்ட வேண்டும் என்றும், கட்டணத்தை கட்ட தவறும் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும்.

திறந்தவெளி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், எம்.ஏ. முதலாமாண்டு சமூக அறிவியல் துறையில் தவறான தகவல்களை பதிவு செய்துள்ளனர். னவே துறை தலைவர்கள், அனுமதித்த பல்கலைக்கழக வேந்தர்களை விசாரித்து காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை நுழையாமல் இருக்க துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்விற்கான அட்டவணை விரைவில் வெளியாகும். சூரப்பா மீதான விசாரணைக்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கை தாக்கல் செய்த பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Updated On: 20 May 2021 2:56 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்