/* */

உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் 53 பேர் பணி நீக்கம்: தமிழக அரசு அதிரடி!

அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் 53 பேர் பணி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் 53 பேர் பணி நீக்கம்: தமிழக அரசு அதிரடி!
X

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் திமுக வெற்றி பெற்று ஆட்சி மாறியதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 108 பேரும், மதுரை உயர்நீதிமன்ற கிளை அரசு வழக்கறிஞர்களில் 30 பேர் ராஜினாமா செய்தனர். அதிமுக வழக்கறிஞர்களின் இந்த ராஜினாமாவை ஏற்று அரசாணை பிறக்கப்பட்டது.

தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சியின் கீழ் தலைமை அரசு வழக்கறிஞராக சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டார். சென்னை ஐகோர்ட், ஐகோர்ட் மதுரை கிளை ஆகியவற்றுக்கும் தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ராஜினாமா செய்யாத அதிமுக வழக்கறிஞர்களை அதிரடியாக பதவி நீக்கம் செய்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டின் வழக்கறிஞர்கள் 28 பேர், ஐகோர்ட் மதுரை கிளை வழக்கறிஞர்கள் 25 பேர் என மொத்தம் 53 பேர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On: 7 Jun 2021 10:20 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!