/* */

பழிவாங்கும் நடவடிக்கையை முதல்வர் கைவிட வேண்டும் :அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி பேச்சு

central minister chennai meeting speech சென்னை தாம்பரத்தில் நடந்த பாஜ 9்ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு பேசினார்.

HIGHLIGHTS

பழிவாங்கும் நடவடிக்கையை முதல்வர்  கைவிட  வேண்டும் :அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி பேச்சு
X

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் (கோப்பு படம்)

central minister chennai meeting speech

சென்னைக்கு அருகே உள்ள தாம்பரத்தில் நடந்த மத்திய அரசின் ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் கலந்துகொண்டு பேசினார்.திருவாரூரில் நடந்த கலைஞர் கோட்ட திறப்புவிழாவில் முதல்வர் ஸ்டாலின் பாஜ பற்றி பேசியதற்கு நேர்மறைப் பேச்சு போல் இருந்தது அவர் பேசிய பேச்சு.அவர்கூட்டத்தில் பேசியதாவது,

எதிர் கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்த ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலின் போல் தமிழக முதல்வர் செயல்படவேண்டாம் என எச்சரிக்கை விடுத்து பேசினார்.இந்தியாவில் கடந்த 55 ஆண்டுகளாக ஆட்சிசெய்த காங்கிரஸ் ஆட்சியில் நாடானது போதிய வளர்ச்சியைப் பெறவில்லை. ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுக்காலத்தில் பாஜ ஆட்சியில் உலகமே உற்று நோக்கும் வகையில் அதீத வளர்ச்சியைக் கண்டுள்ளோம். தனிநபர் வருமானம் 2022-23 ம் ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. பொருளாதாரத்தினைப் பொறுத்தவரை இந்தியாவானது உலகின் ஐந்தாவது நாடாக உயர்ந்துள்ளது.

இதே நிலையில் தொடர்ந்தால் வரும் 2047 ல் இந்திய நாடானது பொருளாதாரத்தில் முதலிடம் வகிக்கும் என உலக வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலக நாடுகள் அனைத்திலுமே இந்தியாவின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.பல பிரச்னைகளுக்கு இந்தியா என்ன சொல்கிறது என்று உலகமே தற்போது காத்திருக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அந்த வகையில் இந்தியா வளர்ந்துள்ளது. வளர்ந்த நாடுகள் அனைத்தும் இந்திய பிரதமர் மோடி தங்கள் நாட்டிற்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன. அமெரிக்க பார்லிமென்டில் இரண்டாவது முறையாக உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடிதான்.

இதுநாள் வரை இறக்குமதி செய்யும் நாடாக இருந்த இந்திய நாடானது தற்போது ஏற்றுமதி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது வளர்ச்சிதானே. இந்தியர்களால் இந்தியாவிற்கான ராணுவ தளவாட உற்பத்தி செய்யமுடிகிறது என்ற நிலை உருவாகியுள்ளது. சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறோம்.

மொபைல் போன் உற்பத்தியில் சீனாவினை பி்ன்னுக்கு தள்ளிவிட்டோம். இந்தியாவைப் பொறுத்தவரை வரையறுக்கப்பட்ட எல்லைகளை எப்போதும் தாண்டாது. ஆனால் அத்து மீறினால் யாராவது சீண்டிப்பார்த்தால் சும்மா இருக்காது என்பதை உலக நாடுகள் அனைத்தும் நன்கு அறிந்துள்ளது.

தமிழகத்தில் நடக்கும் ஆட்சியைப் பற்றி நாடே அறியும்.செந்தில்பாலாஜிஅதிமுகவில் இருக்கும்போது அவரை ஊழல்வாதி என்ற முதல்வர் ஸ்டாலின் இப்போது அவரைக் கைது செய்திருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பேசி வருகிறார்.

தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் பாஜ ஆட்சி அமைய ஆதரவு கொடுப்பார்களானால் ஊழலற்ற நல்லாட்சியை பாஜ நிச்சயம் தரும். பாஜ ஆட்சியில் ஊழல்வாதிகள் சிறையில் இருப்பார்கள்.தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உள்ளது. கூட்டணி கட்சிக்கு உரிய மரியாதையை நாங்கள் அளித்து வருகிறோம். ஏழைகளின் நலனில் அக்கறை கொண்டு பாடுபட்ட வாஜ்பாய் பிரதமராக துணை நின்ற ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளோம்.

இந்திய பிரதமர் மோடி தமிழகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். பாதுகாப்பு வழித்தட திட்டத்தினை தமிழகம் , உ.பி ஆகிய இருமாநிலங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நான் தமிழகத்தில் தொழில் துவங்க தொழிலதிபர்களை ஊக்குவித்து வருகிறேன்.

அண்மையில் சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்த பாஜ மாநில செயலாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ரஷ்ய முன்னாள் அதிபர் சர்வாதிகாரிஸ்டாலின்போல் தமிழக முதல்வர் செயல்படக்கூடாது. பழிவாங்கும் நடவடிக்கையை கைவி்ட வேண்டும். நேர்மறை அரசியல்தான் நன்மை தரும். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடியின் கட்டளையை வேகமாக செயல்படுத்தி வருகிறார் என்று பேசினார்.

அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெறவேண்டும் என வடஇந்திய தலைவர்கள் தமிழகத்தில் அடிக்கடி விசிட் செய்வது தற்போது வாடிக்கையாகி வருகிறது. எப்படியாவது 25 இடங்களில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என முன்பு சென்னை வந்த அமித்ஷா பேசியது நினைவிருக்கலாம். இதனை வைத்து பார்க்கும்போது தமிழகத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற பாஜ கணக்கு போடுவது தெரிகிறது. இன்னும் எதிர்காலத்தில் பாஜவின் செயல்பாடுகள் வெகு தீவிரமாக இருக்கும் எனவும் தெரிகிறது.

Updated On: 21 Jun 2023 6:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  2. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  4. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  5. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  6. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  7. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  9. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  10. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...